ரூட் கிளியர்! புத்தாண்டில் குட் நியூஸுடன் ஷாக்கிங்! பவித்ரா லோகேஷ்- நடிகர் நரேஷ் பாபு போட்ட வீடியோ
அமராவதி: பல்வேறு களேபரங்களுக்கு மத்தியில் 44 வயது நடிகையை 4ஆவது திருமணம் செய்கிறார் 60 வயது நடிகர் நரேஷ். இதனை புத்தாண்டின் போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
பிரபல கன்னட நடிகை பவித்ரா லோகேஷ். இவர் பிரபல நடிகர் மைசூர் லோகேஷின் மகளாவார். பவித்ரா தனது 16ஆவது வயதில் கன்னட திரையுலகில் அறிமுகமானார். இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ் சினிமாவிலும் துணை நடிகையாக நடித்துள்ளார். சில படங்களில் அம்மா, அக்கா கேரக்டர்களில் நடித்துள்ளார். 9 ஆம் வகுப்பு படிக்கும் போதே தனது தந்தையை இழந்த பவித்ரா குடும்ப வறுமை காரணமாக சினிமாவில் நடிக்க வந்தார்.

சாப்ட்வேர் என்ஜினியர்
இவர் சாப்ட்வேர் என்ஜீனியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் நடிகர் சுச்சேந்திர பிரசாத்துடன் மலர்ந்த காதலால் சாப்ட்வேர் என்ஜீனியரை விவாகரத்து செய்தார். பிரசாத்தை திருமணம் செய்து கொள்ளாமல் அவருக்கு 2018 ஆம் ஆண்டு வரை வாழ்ந்து வந்தார் பவித்ரா. 2021 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நரேஷுடன் காதல் கொண்டார்.

நரேஷ் யார்
நரேஷ் , தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தந்தைக்கும் முதல் மனைவிக்கும் பிறந்ததன் மூலம் மூத்த சகோதரர் ஆவார். இவருக்கு ஏற்கெனவே 3 முறை திருமணமாகிவிட்டது. பவித்ராவும் நரேஷும் மைசூரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்ததை நரேஷின் 3ஆவது மனைவி ரம்யா ரகுபதி அறிந்துக் கொண்டார். உடனே அந்த அறைக்கு சென்று கதவை தட்டினார், இருவரும் திறக்கவே இல்லை.

ஹோட்டல் ஊழியர்கள்
இதனால் ஹோட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் வந்துவிட்டனர். ரம்யாவிடம் விசாரித்தனர். அவர்கள் கதவை திறந்தால் மட்டுமே நான் வெளியே செல்வேன் என கூறி ஹோட்டலில் அமர்ந்து தர்ணா செய்தார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடம் சென்று கதவை தட்டி பவித்ராவையும் நரேஷையும் வெளியே வரவழைத்தனர்.

ரம்யாவை கிண்டல் செய்த நரேஷ்
அப்போது நரேஷ் மனைவி ரம்யாவை பார்த்து சிரித்தபடியே சென்றார். இதையடுத்து பவித்ராவையும் நரேஷையும் ஆபாசமான வார்த்தைகளால் ரம்யா திட்டினார். ஒரு கட்டத்தில் செருப்பால் அடிக்கவும் பாய்ந்தார். அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது ரம்யாவை பார்த்து நரேஷ் விசில் அடித்து கேலி செய்தார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் அடிக்கடி ஹோட்டல்கள், ரிசார்டுகளுக்கு சென்று தங்கினர். தான் எப்படியும் பவித்ராவை திருமணம் செய்து கொள்வேன் என நரேஷ் உறுதியாக தெரிவித்தார்.

கேக் ஊட்டி புத்தாண்டு கொண்டாடிய காதலர்கள்
இந்த நிலையில் 3ஆவது மனைவி ரம்யாவிடம் இருந்து நரேஷ் விவாகரத்து பெற்றார். இதையடுத்து நேற்றைய தினம் நரேஷும் பவித்ராவும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தனது சமூகவலைதளத்தில் நரேஷ் கூறியிருப்பதாவது புத்தாண்டு புதிய ஆரம்பம் , உங்கள் ஆசிர்வாதங்கள் தேவை. உங்கள் அனைவருக்கும் எங்கள் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என குறிப்பிட்டு இருவரும் இனிப்பை மாறி மாறி ஊட்டிக் கொள்கிறார்கள். பிறகு லிப் லாக்கில் ஈடுபடுகிறார்கள். அந்த வீடியோவில் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறோம் என அறிவித்ததோடு பவித்ரா லோகேஷ் பவித்ரா நரேஷ் என குறிப்பிட்டுள்ளனர். திருமணம் செய்து கொள்ள போவதாக ஒரு செய்தியை சொல்லிவிட்டு அவர்களின் லிப் லாக்கை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் முகம் சுளிக்கிறார்கள். பவித்ரா லோகேஷ் நரேஷுடனான காதலால் அவருக்கு சினிமா வாய்ப்புகள் பறி போவதாகவும் செய்திகள் உலா வந்தன. இது எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை.












Click it and Unblock the Notifications