பாகிஸ்தானை புகழ்ந்து பேசிய விவகாரம்.. நடிகை ரம்யா மீது விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் முட்டை வீச்சு
பெங்களூரு: நடிகையும், காங்கிரஸ் முன்னாள் எம்பியுமான ரம்யா மீது விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள அமைப்பினர் முட்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகையும், காங்கிரஸ் முன்னாள் எம்பியுமான ரம்யா அண்மையில் கன்னட டிவிக்கு அளித்த பேட்டியில், 'பாகிஸ்தானில் நடைபெற்ற சார்க் நாடுகளின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்தரங்கில் கலந்துக்கொண்டேன். அங்குள்ள மக்கள் நம்மைப் போலவே சாதாரணமாக வாழ்கின்றனர். இந்தியாவில் இருந்து சென்ற எங்களுடன் மிகுந்த நட்புடன் பழகினர். பாகிஸ்தானுக்கு செல்வது நரகம் செல்வதற்கு ஒப்பானது என மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியது போல அந்நாடு இல்லை. நல்ல நாடாகவே இருக்கிறது என தெரிவித்திருந்தார்.

நடிகை ரம்யாவின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித் துள்ள கர்நாடக பாஜக மற்றும் விஷ்வ இந்து பரிஷத், ஏபிவிபி உள்ளிட்ட இந்து அமைப்புகள் நேற்று பெங்களூரு, மைசூரு, மண்டியா பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. தேசவிரோத வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மங்களூர் அருகே ரம்யா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள அமைப்பினர் முட்டை வீசி தாக்குதல் நடத்தினர். முட்டை வீசியதாக போலீசார் தன்னிடம் தெரிவித்ததாகவும் எனது கார் கன்வாயில் வந்த எந்த கார் மீது வீசப்பட்டது என்பது பற்றி தனக்கு தெரியவில்லை என்று ரம்யா செய்தியாளர்களிடம் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications