அனில் அம்பானிக்கு சொந்தமான விமானத்தில் மும்பை வருகிறது நடிகை ஸ்ரீதேவியின் உடல்!
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் அனில் அம்பானிக்கு சொந்தமான விமானத்தில் கொண்டு வரப்படுகிறது
மும்பை: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் அனில் அம்பானிக்கு சொந்தமான விமானத்தில் மும்பை கொண்டு வரப்படுகிறது
உறவினரின் திருமண நிகழ்ச்சியின் பங்கேற்க துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி அங்கேயே மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மரணம் திடீர் மரணம் திரையுலகினர் மட்டுமின்றி ரசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தமிழ் நடிகையாக அறிமுகமாகி பாலிவுட்டில் கொடிக்கட்டி பறந்த நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

நேற்றே எதிர்பார்க்கப்பட்டது
துபாய் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ஸ்ரீதேவியின் உடல் நேற்றே மும்பை கொண்டுவரப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்க தாமதமானதால் உடலை பெறுவதிலும் தாமதம் ஏற்பட்டது.

செய்தித்தொடர்பாளர் தகவல்
இந்நிலையில் ஸ்ரீதேவியின் உடல் இன்றுதான் இந்தியா கொண்டு வரப்படுகிறது. இந்த தகவலை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

அனில் அம்பானி விமானத்தில்
பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்க தாமதமானதால் நடிகை ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டுவர தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான விமானம் துபாய்க்கு அனுப்பப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவன விமானம்
இந்திய தொழிலதிபர்கள் வரிசையில் டாப்பில் உள்ள அனில் அம்பானி, ரிலையன்ஸ் ட்ரான்ஸ்போர்ட் & ட்ராவல் லிமிட்டெட் நிறுவனத்தின் எம்பரர் 135BJ விமானத்தில் ஸ்ரீதேவியின் உடலை கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளார்.

விமானம் புறப்பட்டது
13 இருக்கைகளை கொண்ட அந்த விமானத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் குடும்பத்தினரை அழைத்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அந்த விமானம் நேற்று பகல் 1.30 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்டு சென்றது.

இன்று உடல் வருகை
அனில் அம்பானியின் விமானத்தில் இன்று மும்பை கொண்டுவரப்படும் ஸ்ரீதேவியின் உடலுக்கு இன்றே இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதேவியின் உடலுக்கு இன்று பகல் 12.30 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications