நடிகை ஸ்ரீதேவியின் உடல் நாளைதான் இந்தியா கொண்டு வரப்படுகிறது.. போனிகபூரின் செய்தி தொடர்பாளர் தகவல்
மாரடைப்பால் துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் நாளைதான் இந்தியா கொண்டுவரப்படுகிறது என அவரது கணவர் போனி கபூரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மும்பை: மாரடைப்பால் துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் நாளைதான் இந்தியா கொண்டுவரப்படுகிறது என அவரது கணவர் போனி கபூரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் துபாயில் நேற்றிரவு காலமானார். 54 வயதில் திடீர் மாரடைப்பால் ஸ்ரீதேவி மரணமடைந்தது இந்தியு திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஸ்ரீதேவியின் மறைவுக்கு தமிழ், இந்தி,தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களும் இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

பிரேத பரிசோதனை நிறைவு
இந்நிலையில் ஸ்ரீதேவியின் உடல் துபாய் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை இதுவரை வழங்கப்படவில்லை.

உடற்கூறு செய்வதில் தாமதம்
இது குறித்து பேசிய துபாய் தடயவியல் துறை அதிகாரிகள், ஸ்ரீதேவி முக்கியமான நபர் என்பதால் அவருக்கு விரிவான உடற்கூறு சோதனை நடைபெற்றதாக தெரிவித்தனர். அதனால் உடற்கூறு செய்வதில் தாமதம் ஏற்பட்டது என்றும் அவர்கள் கூறினர்.

நாளை இந்தியா வருகிறது
இந்நிலையில் ஸ்ரீதேவியின் உடல் நாளைதான் இந்தியா கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அறிக்கை கிடைக்க தாமதம்
பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்க தாமதமானதால் உடல் நாளை கொண்டுவரப்படவுள்ளதாக போனிகபூரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நாளை இறுதிச்சடங்கு
நாளை மும்பை கொண்டு வரப்படும் ஸ்ரீதேவியின் உடல் திரையுலகினர் அஞ்சலிக்குப் பிறகு பகல் 12.30 மணிக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications