இறுதி சடங்குகளுக்கு பின் அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவி உடல் தகனம்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் முழுக்க முழுக்க சம்பங்கி பூவால் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட ஊர்தியில் இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பூவால் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட ஊர்தியில் ஸ்ரீதேவி இறுதி ஊர்வலம்- வீடியோ

    மும்பை: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மும்பை வில்லே பார்லே மின்மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

    உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க கணவர் மற்றும் தனது இரண்டாவது மகள் குஷியுடன் துபாய் சென்றிருந்த
    நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு திடீரென உயிரிழந்தார்.

    அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் அவர் ஹோட்டல் குளியலறையில் உள்ள பாத் டப்பில் மூழ்கி உயிரிழந்தார் என பிரேதபரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

    நேற்று மும்பை வருகை

    நேற்று மும்பை வருகை

    இந்நிலையில் ஸ்ரீதேவியின் உடல் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து எம்பாமிங் செய்யப்பட்ட அவரது உடல் நேற்றிரவு தனி விமானம் மூலம் மும்பை கொண்டுவரப்பட்டது.

    ரசிகர்கள் அஞ்சலி

    ரசிகர்கள் அஞ்சலி

    அவரது உடலுக்கு அனைத்து திரையுலக நட்சத்திரங்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். மும்பை செலிப்ரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

    தேசியக்கொடி

    தேசியக்கொடி

    முன்னதாக ஸ்ரீதேவியின் உடலுக்கு தேசிய கொடி போர்த்தப்பட்டு மகாராஷ்டிர அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மகாராஷ்டிர அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

    சம்பங்கி பூக்கள்

    சம்பங்கி பூக்கள்

    இந்நிலையில் ஸ்ரீதேவியின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட வாகனத்தில் இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. இந்த வாகனம் முழுக்க முழுக்க வெள்ளைநிற சம்பங்கி பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    உடல் தகனம்

    உடல் தகனம்

    அவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரை நட்சத்திரங்களும் ரசிகர்களும் பங்கேற்றனர். ஸ்ரீதேவியின் உடல் வில்லே பார்லே மின்மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+