”மிஸ் திவா 2015” பட்டம் வென்றார் பாலிவுட் மாடல் ஊர்வசி ரவ்டேலா!
மும்பை: மாடல் அழகியும், நடிகையுமான ஊர்வசி ரவ்டேலா, யமஹா ஃபேசினோ மிஸ் திவா 2015 பட்டம் வென்றுள்ளார்.
உத்ரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஊர்வசி கடந்த 2013ம் ஆண்டு சன்னி லியோன் நடிப்பில் வெளியான "சிங் சாப் தி க்ரேட்" படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார்.
மிஸ் திவா பட்டம் வென்றுள்ள ஊர்சி, 2015 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பார்.

மற்ற இரண்டு இடங்கள்:
பெங்களுருவை சேர்ந்த நட்டாஷா அஸ்ஸாடி முதல் ரன்னர் அப் ஆகவும், அவுரங்காபாதத்தைச் சேர்ந்த நவேலி தேஷ்முக் 2 ஆவது ரன்னர் அப் ஆகவும் அறிவிக்கப்படுள்ளனர்.

கங்கனா ரனாவத் - ராலா தத்தா
பாலிவுட் நடிகர்கள் கங்கனா ரனாவத், இர்பான், லாரா தத்தா, விகாஸ் பாஹ்ல், ஆடை வடிவமைப்பாளர் சாந்தனு மற்றும் நிக்கில் ஆகியோர் அழகிகளின் ஜூரிக்களாக நியமிக்கப்பட்டனர்.

மேலும் பல பட்டங்கள்:
மிஸ் யுனிவர்ஸ் நிகழ்ச்சியின் போது, எல்லி அவ்ராம், சல்மான் யூசுஃப் கான் மற்றும் குர்மீத் சவ்த்ரி, ஆஷா பட், அலங்க்ரிதா சஹாய் ஆகியோரின் நடனம் அனைவரையும் கவர்ந்தது. தேர்வு செய்யப்பட அழகிகள் அனைவரும் யமஹா ஃபேசினோ மிஸ் ஃபேஷிநேட்டிங், யமஹா ஃபேசினோ மிஸ் போட்டோ ஜெனிக், ஜெம்ஃபீல்ட்ஸ் மிஸ் ஸ்பார்க்லிங்க் பியூட்டி போன்ற பட்டங்களால் கவுரவிக்கப்பட்டனர்.

11 போட்டியாளர்கள்:
அழகிகளுக்கு நடத்தப்பட்ட 7 சுற்று போட்டிகளில் திறமையை வெளிப்படுத்த தவறிய அழகிகள் போட்டியில் இருந்து நீக்கப்பட்டனர். இறுதியாக கடைசி சுற்றிற்கு தேர்வு செய்யப்பட 11 போட்டியாளர்களில் 5 பேர் நீக்கப்பட்டனர். யமஹா ஃபேசினோ மிஸ் திவா 2015 போட்டியில் பங்கேற்க நாடுமுழுவதிலும் இருந்து 10,000 மேற்பட்ட அழகிகள் கலந்துக் கொண்டனர்.

அழகிகள் தேர்வு:
இந்த போட்டிக்கான தேர்வுகளில்இந்தியாவின் முக்கியமான 10 நகரங்களில் இருந்து 4 மண்டலங்களாக பிரித்து அழகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இறுதிச்சுற்று தேர்வு மும்பையில் நடைபெற்றதில் பங்கேற்ற 16 அழகிகள் இறுதி போட்டிக்கு தகுதியாகி மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்திற்கு போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications