கெளதம் அதானி மகனுக்கு எளிமையான முறையில் நடந்த திருமணம்! மகிழ்ச்சியுடன் அதானி பகிர்ந்த புகைப்படங்கள்!
டெல்லி: உலக அளவில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானியின் குடும்ப திருமணம் மிக எளிய முறையில் நடைபெற்று இருக்கிறது. தாங்கள் விரும்பிபோதும் கூட அனைத்து நலன் விரும்பிகளையும் விழாவுக்கு அழைக்க முடியவில்லை எனவும், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறியுள்ள கௌதம் அதானி, திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
உலக அளவில் பெரும் பணக்காரரான கௌதம் அதானின் இளைய மகனான ஜீத் அதானிக்கும் பிரபல வைர வியாபாரியான ஜெயின்ஷாவின் மகள் திவா ஜெயின் ஷாவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. மிகவும் எளிமையாக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

முன்னதாக திருமணத்தில் உலக அளவில் பிரபலங்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள அதானி சிட்டியில் மிக எளிமையான முறையில் குஜராத்தி முறைப்படி திருமணம் நடைபெற்றது.
பெரிய அளவில் பிரபலங்கள், அரசியல்வாதிகள் இதில் கலந்து கொள்ளவில்லை. இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான அதானி தன் மகனுக்கு எளிய முறையில் திருமணம் செய்து வைத்தது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறி உள்ளது.
திருமணம் தொடர்பாக புகைப்படங்களை பகிர்ந்துள்ள கவுதம் அதானி," எல்லாம் வல்ல இறைவனின் ஆசிர்வாதத்துடன், ஜீத்தும் திவாவும் இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். திருமணத்தன்று அகமதாபாத்தில் பாரம்பரிய சடங்குகளுடனும், சுப மங்கல பாவுடனும் அன்பானவர்களுடன் நடைபெற்றது. இது ஒரு சிறிய மற்றும் மிகவும் தனிப்பட்ட விழாவாக இருந்தது, எனவே நாங்கள் விரும்பினாலும் கூட அனைத்து நலம் விரும்பிகளையும் அழைக்க முடியவில்லை, அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். திவா மற்றும் ஜீத் மீது உங்கள் அனைவரிடமிருந்தும் எனது மனமார்ந்த அன்பையும் ஆசீர்வாதங்களையும் வேண்டுகிறேன்." என கூறியுள்ளார்.
மதியம் 2 மணிக்கு திருமணம் தொடர்பான சடங்குகள் தொடங்கிய நிலையில் மாலையில் ஜீத் அதானி மற்றும் திவா ஜெயின் ஷாவின் திருமணம் நடைபெற்று இருக்கிறது. திருமணத்தை முன்னிட்டு கௌதம் அதனி பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதியை நன்கொடை அளிப்பதாக தெரிவித்திருக்கிறார். சுகாதாரம் கல்வியில் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் பெரிய அளவிலான கட்டமைப்பு திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து மக்களும் பயன்பெறுவதற்காக மருத்துவமனைகள் மருத்துவ கல்லூரிகளை நிறுவுவதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என கௌதம் அதானி கூறியிருக்கிறார். முன்னதாக கடந்த மாதம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் குடும்பத்துடன் நீராடிய பின்னர் இது குறித்து பேசிய அவர், "என்னுடைய வளர்ப்பும், நான் செய்யும் விஷயங்களும் சாதாரண தொழிலாளி வர்க்கத்தை சேர்ந்தது போன்று இருக்கும். ஜீத்தும் அப்படித்தான். அவரது திருமணம் எளிய முறையில் குடும்ப பாரம்பரிய முறைப்படி நடக்கும்" என்று கூறியிருந்தார். அதேபோல இன்று திருமண நிகழ்ச்சிகள் எளிமையாக நடைபெற்றன.
ஜீத் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் கல்வி நிலையத்தில் பட்டம் பெற்றவராவர். மட்டுமல்லாது பயிற்சி பெற்ற விமானியும் கூட. தற்போது அதானி குழுமத்தின், குழும தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
परमपिता परमेश्वर के आशीर्वाद से जीत और दिवा आज विवाह के पवित्र बंधन में बंध गए।
— Gautam Adani (@gautam_adani) February 7, 2025
यह विवाह आज अहमदाबाद में प्रियजनों के बीच पारंपरिक रीति रिवाजों और शुभ मंगल भाव के साथ संपन्न हुआ।
यह एक छोटा और अत्यंत निजी समारोह था, इसलिए हम चाह कर भी सभी शुभचिंतकों को आमंत्रित नहीं कर सके,… pic.twitter.com/RKxpE5zUvs
திவா, C. Dinesh and Co. Private Limited எனும் வைர விற்பனை நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார். இந்த நிறுவனம் மும்பை உட்பட பல முக்கிய நகரங்களில் கிளைகளை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications