ஜியோ பயன்பாட்டாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி... பிரைம் ஜியோ திட்டத்தில் கூடுதல் டேட்டா!
ரிலையன்ஸ் ஜியோ பிரைம் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட டேட்டாவுடன் கூடுதலாக 5 ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவில் மார்ச் 31-க்கு பிறகு, பிரைம் ஜியோ திட்டங்கள் குறித்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கூடுதலாக 5 ஜிபி டேட்டா வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ கடந்த செப்டம்பர் மாதம் இலவச டேட்டா, இலவச வாய்ஸ்கால்களை அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. டிசம்பர் மாதத்துடன் முடிவடைய வேண்டிய இந்தத் திட்டம் கூடுதலாக மேலும் 3 மாதங்களுக்கு அதாவது, மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.
ஜியோவின் இந்த சேவைகளை பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இளைஞர்கள் விலை குறைந்த 4ஜி தொழில்நுட்பம் கொண்ட செல்போன்களை வாங்கினர். இந்நிலையில் இலவச சேவைகள் இம்மாத இறுதியில் நிறைவு பெறவுள்ளதை தொடர்ந்து அந்நிறுவனம் கட்டண திட்டங்களை (டாரிஃப் ரேட்ஸ்) அறிவித்தது.

ரூ.99-க்கு ரீசார்ஜ்
ஏற்கெனவே ஜியோ கட்டண திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு ஜியோ பிரைம் எனும் புதிய திட்டத்தை சில தினங்களுக்கு முன் ஜியோ அறிவித்தது. ஜியோ பிரைம் திட்டத்திற்கு பதிவு செய்ய வாடிக்கையாளர்கள் ஒரு முறை கட்டணமாக ரூ.99-க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றும் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மார்ச் 31, 2018 வரை வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

கூடுதல் டேட்டா
ஜியோ பிரைம் திட்டத்தை பதிவு செய்ததும் மாத ரீசார்ஜ் அடிப்படையில் ஜியோ திட்டங்களை தொடர்ந்து பயன்படுத்த முடியும். இந்நிலையில் ரூ.303-க்கு ரீசார்ஜ் செய்வோருக்கு கூடுதலாக 5 ஜிபி டேட்டா வழங்குவதாக ஜியோ அறிவித்துள்ளது.

முதல் மாதத்துக்கு மட்டுமே
ஜியோ பிரைம் திட்டத்திற்கு பதிவு செய்ய மார்ச் 31, 2017 கடைசி தேதியாகும். புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் டேட்டா மூலம் நாள் ஒன்றிற்கு 1ஜிபி என்ற அளவை கடந்த பின் இன்டர்நெட் வேகம் குறையாது. எனினும் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் டேட்டா முதல் மாதத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

56 ஜிபி டேட்டா
இதே போல் ரூ.499 மற்றும் அதற்கும் மேல் ரீசார்ஜ் செய்வோருக்கு கூடுதலாக 10 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. முன்னதாக 56 ஜிபி டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும் கூடுதல் டேட்டா முதல் மாதத்திற்கு மட்டுமே வழங்கப்படும்.

பிரைம் ஜியோவில் என்னென்ன?
முதலில் ரூ.303-க்கு ஜியோ பிரைம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதில் வாடிக்கையாளர்களுக்கு தற்சமயம் வழங்கப்படும் ஜியோ புத்தாண்டு சலுகையை 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும். அந்த வகையில் தினமும் 1ஜிபி வரை அதிவேக 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ், எஸ்எம்எஸ், ஜியோ செயலி பயன்பாடு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
ஜியோவின் இலவச சேவைகளால் தங்களின் தொழில் பாதிக்கப்படுவதாக வோடஃபோன் நிறுவனம் டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications