அதிமுக மாஜி சைதை துரைசாமி மகன் எங்கே? இமாச்சலில் விபத்துக்குள்ளான கார்.. சடலமாக மீட்கப்பட்ட ஓட்டுநர்
சிம்லா: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவும் சென்னை முன்னாள் மேயருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி இமாச்சல் பிரதேசம் சென்ற கார் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் பலியான நிலையில், வெற்றியை காணவில்லை என அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது.
அதிமுகவை சேர்ந்தவர் சைதை துரைசாமி. சென்னை முன்னாள் மேயராகவும், சைதாப்பேட்டை முன்னாள் எம்.எல்.ஏவாகவும் இருந்தவர் சைதை துரைசாமி. இவருக்கு வெற்றி என்ற மகன் உள்ளார். இவர் கார் மூலம் இமாச்சல பிரதேசத்துக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அம்மாநிலத்தின் காசாங் நாலா என்ற பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இவரது கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது கார் அருகே இருந்த சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரின் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது. சைதை துரைசாமி மகன் வெற்றியுடன் திருப்பூர் வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் கோபிநாத் என்பவரும் காரில் இமாச்சல பிரதேசத்துக்கு பயணித்து உள்ளார். 32 வயதான இவர் விபத்தில் அவரும் படுகாயமடைந்து மீட்கப்பட்டு இருக்கிறார். அவர் ஆர்.எச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்தில் உயிரிழந்த கார் ஓட்டுநரின் பெயர் தன்சின் என்றும், இமாச்சல பிரதேச மாநில விபிஓ டாபோ என்ற பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்து இருக்கிறது. இந்த நிலையில் இவர்களுடன் சென்ற வெற்றியை மட்டும் காணவில்லை. 45 வயதான வெற்றி சென்னை நந்தனம் சிஐடி நகர் பகுதியில் வசித்து வந்து உள்ளார். இவர் விபத்து ஏற்பட்டபோது காரில் இருந்தாரா? அல்லது வேறு எங்கும் சென்றாரா? அவர் இமாச்சல் பிரதேசம் சென்றது ஏன்? சுற்றுலா பயணத்துக்காகதான் சென்றாரா? என்ற கேள்விகள் எழுகின்றன.
காணாமல்போன வெற்றியை தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மகன் சென்ற கார் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததுடன், வெற்றி மாயமாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications