தமிழகத்தில் அதிமுக ஆட்சி கலையவே கலையாது.. பாஜக "தம்ஸ் அப்"!
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று எதிர்கட்சியினர் ஆருடம் சொன்னாலும் இப்போதைக்கு ஆட்சி மாற்றம் ஏற்படாது என்றே நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி: தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் ஆட்சி மாற்றம் வரும் என்று போகும் இடங்களில் எல்லாம் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால் மத்தியில் உள்ள ஆளும் பாஜக அரசோ, தற்போதைக்கு ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பே இல்லை என்றே அதிமுகவினருக்கு நம்பிக்கை அளித்து வருகிறதாம்.
ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைய பேச்சுவார்த்தை நடத்தியது போல தற்போது எடப்பாடி பழனிச்சாமியுடன் தினகரன் இணைய பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்காரணமாகவே தமிழக அமைச்சர் ஒருவர் விரைவில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களும் எங்களுடன் இணைவார்கள் என்று கூறி வருகின்றனர்.

மத்திய அமைச்சர்களுடன் சந்திப்பு
கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி, சி.வி சண்முகம் உள்ளிட்டோர் டெல்லி சென்றனர். அவர்களுடன் அதிமுக எம்பி தம்பிதுரையும் இணைந்து மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமனை சந்தித்தார்கள்.

டெல்லி சென்ற புகழேந்தி
அமைச்சர்கள் டெல்லி சென்ற அதே நாளில் டிடிவி தினகரன் ஆதரவாளரும் கர்நாடகா அதிமுக செயலாளர் புகழேந்தியும் டெல்லி சென்றார். தேர்தல் ஆணையத்திடம் மனு அளிப்பதற்காக சென்றதாக கூறினாலும் பாஜகவின் அழைப்பின் பேரிலேயே சென்றதாக கூறப்படுகிறது.

தினகரனின் குடைச்சல்
21 எம்எல்ஏக்களை புதுச்சேரியில் கொண்டு போய் வைத்துக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு குடைச்சலை கொடுத்து வருகிறார் தினகரன். அவருக்கு ஆதரவாக திவாகரனும் அவ்வப்போது குண்டுகளை கொளுத்தி போட்டு வருகிறார்.

ஆட்சி கலையுமா?
ஆட்சியை கலைப்பதற்கான முயற்சிகளை தினகரன் மேற்கொண்டுவருகிறார் என்பது பற்றி பேசுவதற்குத்தான். எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் தரப்பை சேர்ந்தவர்கள் டெல்லியில் முகாமிட்டனர். அமித்ஷாவுடன் இது தொடர்பாக பேசினார்கள். ஆனால் அதெல்லாம் ஆட்சி கலையாது அதை நாங்க பார்த்துக்கொள்கிறோம் என்று நம்பிக்கையாக கூறியிருக்கிறார்களாம்.

பாஜக கொடுத்த நம்பிக்கை
பாஜக தரப்பில் இருந்து பேசியவர்கள் எல்லோரும் தினகரனால் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வராது என்ற உறுதியும் உத்தரவாதமும் கொடுத்ததாக கொடுத்திருக்கிறார்கள். அதைத்தான் எதிர்கட்சியினருக்கு ஆளுநர் தன் தரப்பு வார்த்தையாக கூறியுள்ளார்.

தினகரனுக்கு எச்சரிக்கை
ஆட்சியை கலைக்கிறோம்... கட்சியை பிடிக்கிறோம்னு எதுவும் குழப்பம் செய்யதால் எங்கள் அஸ்திரத்தை ஏவுவோம் என்று தினகரன் தரப்பை எச்சரித்துள்ளதாம் பாஜக. பேசமா கொஞ்ச நாள்ல நீங்களும் இணைந்து விடுங்கள் என்றும் தினகரன் தரப்பு தூதுவர் புகழேந்தியிடம் பேசியிருக்கிறார்களாம்.

முதல்வரை மாற்ற வேண்டும்
டெல்லியில் இருந்து தினகரனிடமே சிலர் பேசி இருக்கிறார்கள். அவர்களிடம் தினகரன் கூறியதெல்லாம்,எடப்பாடி முதல்வராக இருக்க கூடாது. அவரை எடுத்துட்டு வேற ஒருத்தரை முதல்வராக்க வேண்டும் என்பதுதான் அதைத்தான் நாங்க சொல்கிறோம் என்று கூறினார்.

பாஜகவின் பஞ்சாயத்து
பாஜகவின் பஞ்சாயத்து தொடர்ந்து நடக்கிறது. அந்த நம்பிக்கையில்தான் ஆட்சியை தினகரன் கலைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்க மாட்டார் என நம்பிக்கையை கொடுத்து வருகிறது பாஜக. அதைத்தான் மீண்டும் கட்டப்பஞ்சாயத்து நடக்கும் என்று கூறியிருக்கிறார் ஸ்டாலின்.

அமைச்சரவையில் இடம்
மத்திய அமைச்சரவையில் அதிமுகவை சேர்ந்த தம்பித்துரை, வேணுகோபால் ஆகியோருக்கு இடம் தரலாம் என்றும் ஒரு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதே நேரத்தில் ஜெயலலிதா ஆதரவாளர்கள் பலரும் பாஜகவை நோக்கி நகர்வார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொன் ராதாகிருஷ்ணன்
இதை மனதில் வைத்துதான் நயினார் நாகேந்திரன் போல அதிமுகவில் இருந்து பல முக்கிய தலைவர்கள் பாஜகவில் வந்து இணைவார்கள் என்று கூறியிருக்கிறார்.

காத்திருக்கும் பாஜக
தமிழகத்தில் உடனே ஆட்சியை கலைத்தால் அது திமுகவிற்குத்தான் வாய்ப்பாக அமையும் எனவே அதிமுக ஆட்சியை வைத்துக்கொண்டே பாஜக காலூன்ற முயற்சி செய்கிறது. இன்றும் சில ஆண்டுகள் கழித்து தேர்தல் வந்தால்தான் அது பாஜகவிற்கு சாதகம் என்று கருதுகிறதாம் டெல்லி மேலிடம். எனவேதான் இப்போதைக்கு ஆட்சி கலையாது என்று நம்பிக்கை தருகிறது பாஜக.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications