காவிரி விவகாரத்தில் நாளை அதிமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

காவிரி விவகாரத்தில் நாளை அதிமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி நாளை அதிமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும் காவிரி மேலாண்மை வாரியத்தை நிறைவேற்றுவதாக தெரியவில்லை. இந்த தீர்ப்புக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் எதிர்ப்பு தெரிவித்தார்.

ADMK MPs conduct protest tomorrow for Cauvery issue

இதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று பிரதமரை சந்தித்து வலியுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

எனினும் அனைத்துக் கட்சி தலைவர்களை பிரதமர் சந்திக்க மறுத்துவிட்டதாகவும் துறை அமைச்சரை சந்திக்குமாறு வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆந்திராவுக்கு தனி அந்தஸ்து வழங்க கோரி ஆந்திர எம்பிக்கள் இன்று போராட்டம் நடத்திய நிலையில் காவிரிக்காக தமிழக எம்பிக்கள் என்ன செய்ய போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் காவிரி விவகாரத்தில் நாளை அதிமுக எம்பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+