பாகிஸ்தான் பாடகர் அட்னான் சமிக்கு இந்தியக் குடியுரிமை.. மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல பாடகர் அட்னான் சமிக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2016ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அதாவது நாளை முதல் அவர் இந்தியக் குடிமகனாக மாறுவார். தனது பாகிஸ்தான் குடியுரிமையை சமி விட்டுக் கொடுத்ததைத் தொடர்ந்து அவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க மத்திய அரசு தீர்மானித்ததாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய குடியுரிமைச் சட்டம் 1955, பிரிவு 6ன் கீழ் சமிக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. கடந்த 2001ம் ஆண்டிலிருந்து இந்தியாவில்தான் வசித்து வருகிறார் சமி. அவர் தனக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரி விண்ணப்பித்திருந்தார். தற்போது அது ஏற்கப்பட்டுள்ளது.
கலையுலகுக்கு சமி ஆற்றியுள்ள சேவையைக் கருத்தில் கொண்டும், இந்தியாவை தனது வீடாக அவர் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டதாலும் அவரது குடியுரிமை கோரிக்கை பரிசீலிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமிக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படக் கூடாது என்று சிவசேனா கடுமையாக எதிர்த்து வருகிறது என்பது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications