உ.பியில் அத்வானியின் பாஜக பேரணி திடீர் ஒத்திவைப்பு

அகோலா கிராமத்தில் பாஜக விவசாயிகள் அணி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்தது. இதனால், அதற்கான ஏற்பாடுகளை அந்தக் கட்சியினர் தீவிரமாகச் செய்து வந்தனர். இந்தப் பேரணியில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, தேசிய செயலர் வருண் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்க இருந்தனர். .
இந்த நிலையில், பேரணிக்கு வழங்கப்பட்ட அனுமதி திடீரென ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக செப்டம்பர் 29ம் தேதி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது..
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரம் மத கலவரமாக உருவெடுத்து முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் பரவியது. கலவர பீதி நீடிப்பதால் ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுள்ளது. முசாபர்நகர் மாவட்டத்தின் 90 சதவீத பகுதிகளில் நேற்று 6 வது நாளாக ஊரடங்கு நீடித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சட்டம்-ஒழுங்கைக் கருத்தில் கொண்டு பேரணிக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்
அகோலா கிராமத்தில் விவசாயிகள் அணி பேரணி நடத்த 8 வாரங்களுக்கு முன்னதாகவே அனுமதி பெறப்பட்டது. பேரணியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் ஒரு லட்சம் விவசாயிகள் பங்கேற்கவிருந்தனர். இந்த நிலையில், பேரணிக்கு வழங்கப்பட்ட அனுமதியை மாவட்ட நிர்வாகம் திடீரென ரத்து செய்துள்ளது அந்தக் கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம், கருத்து சுதந்திரத்தை அந்த மாநில அரசு நசுக்க முயற்சிக்கிறது என்று பாஜக கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications