For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அப்ரிதி, இந்திய ரசிகர்களுக்காக ஆடையை அவிழ்த்து வீடியோ வெளியிட்ட நடிகை அர்ஷி கான்

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிதியின் காதலியும், நடிகையுமான அர்ஷி கான் அவருக்காகவும், இந்திய ரசிகர்களுக்காகவும் ஆடையை அவிழ்த்து நடனமாடி வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

மாடலும், நடிகையுமான அர்ஷி கானை யாருக்கும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் தான் அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிதி தனது காதலர் என்று உலகிற்கு தெரிவித்து பிரபலம் ஆனார்.

அப்ரிதியுடன் தான் உறவு கொண்டதாகவும், அவர் படுக்கையில் அபாரமாக உள்ளார் என்றும் கூறியவர் அர்ஷி கான். கடந்த சில நாட்களுக்கு முன்பு அர்ஷி தான் அப்ரிதியின் குழந்தையை கருவில் சுமந்து கொண்டிருப்பதாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.

இதற்கிடையே டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை தோற்கடித்தால் தான் மேலாடையின்றி நடனமாடுவதாகவும், இந்தியா பாகிஸ்தானை தோற்கடித்தால் இடுப்புக்கு கீழ் ஆடையின்றி தோன்றுவதாகவும் அர்ஷி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர் தனது ஆடையை அவிழ்த்துவிட்டு நடனமாடி அதை வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ அப்ரிதி மற்றும் இந்திய ரசிகர்களுக்ககாகவாம்.

English summary
Pakistan cricketer Shahid Afridi's girl friend Arshi Khan has done a strip dance for him and Indian fans.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X