பஜ்ஜியை அடுத்து ரெய்னா வீட்டிலும் 'குவா குவா' சப்தம் கேட்கப் போகிறது!
மும்பை: கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் மனைவி பிரியங்கா கர்ப்பமாக உள்ளாராம்.
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கும் அவரது பள்ளி காலத்து தோழி பிரியங்காவுக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் தேதி திருமணம் நடைபெற்றது. வெளிநாட்டில் பணிபுரிந்த பிரியங்கா திருமணத்திற்காக வேலையை விட்டுவிட்டு வந்து இந்தியாவில் செட்டில் ஆகிவிட்டார்.

டெல்லியில் நடந்த ரெய்னா, பிரியங்காவின் திருமணத்திற்கு கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள் என பலர் வந்திருந்தனர். இந்நிலையில் பிரியங்கா கர்ப்பமாக இருப்பதாக ரெய்னா தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரெய்னா கூறியிருப்பதாவது,
நான் விரைவில் தந்தையாகப் போகிறேன். அடுத்த மாதம் எங்கள் வீட்டில் குட்டிப்பாப்பா இருக்கும். பிரியங்கா பிரசவத்திற்காக ஹாலந்து சென்றுள்ளார். அவருடன் என் தாய் உள்ளார். நானும் விரைவில் ஹாலந்து செல்கிறேன் என்றார்.
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் மனைவி கீதா பஸ்ராவும் கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications