எதிர்த்து பேசிய மன்மோகன்.. கை குலுக்கிய மோடி.. எல்லாம் சரி.. பதில் சொல்லாம "எஸ்" ஆயிட்டிங்களே!
ராஜ்ய சபாவில் ரூபாய் நோட்டு செல்லாது தொடர்பான விவாதத்தில் கடுமையாக பேசிய மன்மோகன் சிங்கிடம் சிரித்து பேசி, கை குலுக்கினார் பிரதமர் மோடி,
டெல்லி: ராஜ்ய சபாவில் இன்று நடைபெற்ற ரூபாய் நோட்டு செல்லாது தொடர்பான விவாதத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக பேசினார். இதனை தொடர்ந்து உணவு இடைவேளையின் போது பிரதமர் மோடி மன்மோகன் சிங்கை பார்த்து, சிரித்து, கை குலுக்கி பேசிவிட்டு சென்றார்.
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை இந்தியாவில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கடந்த 16ம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர் காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. ராஜ்ய சபா தொடங்கிய முதல் நாளில் இருந்தே, அவையில் ரூபாய் நோட்டுக்கள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும் மோடி அவைக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

இதனையடுத்து, இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய அவை எதிர்க்கட்சியின் அமளியால் 12 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் 12 மணிக்கு அவை கூடிய போது, பிரதமர் மோடி வருகை தந்தார். இதனைத் தொடர்ந்து ராஜ்ய சபாவில் ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த சபாநாயகர் அனுமதி அளித்தார். இந்த விவாதத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்து உரையாற்றினார். மன்மோகன் சிங் தனது உரையில் போது மத்திய அரசை மிகக் கடுமையாக பேசினார்.
இதனைத் தொடர்ந்து ராஜ்ய சபாவில் உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது பிரதமர் மோடி, மன்மோகன் சிங் நோக்கி வந்து கை குலுக்கினார். சிறிது நேரம் சிரித்து பேசிவிட்டு பின்னர் அங்கிருந்து சென்றார். அதே போன்று காங்கிரஸ் எம்பி குலாம் நபி அசாத், ஆனந்த் சர்மா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் பேசிவிட்டுச் சென்றனர்.
உணவு இடைவேளைக்கு பிறகு பிரதமர் மோடி வருவார் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில், வராமல் எஸ்கேப் ஆகிவிட்டார். இதனால் அவையில் அவரின் பதிலுக்காக காத்திருந்த எதிர்க்கட்சியினர் ஏமாற்றம் அடைந்தனர்.
Prime Minister Narendra Modi walked over to Ex-PM Manmohan Singh and shook hands.
ராஜ்ய சபாவில் இன்று நடைபெற்ற ரூபாய் நோட்டு செல்லாது தொடர்பான விவாதத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக பேசினார். இதனை தொடர்ந்து உணவு இடைவேளையின் போது பிரதமர் மோடி மன்மோகன் சிங்கை பார்த்து, சிரித்து, கை குலுக்கி பேசிவிட்டு சென்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications