24 மணிநேரத்திற்குள் கொல்கத்தா ஏர்போர்ட்டை தகர்ப்போம்: இமெயில் மூலம் மிரட்டல்
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தை 24 மணிநேரத்திற்குள் குண்டு வைத்து தகர்க்கப் போவதாக இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தின் மேனேஜருக்கு இன்று காலை இமெயில் ஒன்று வந்துள்ளது. அதில், விமான நிலையத்தை 24 மணிநேரத்திற்குள் குண்டு வைத்து தகர்க்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமெயில் ஜெர்மனியில் இருந்து வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் பயணிகளின் உடைமைகள், வாகனங்கள் தீவிர சோதனை செய்யப்படுகிறது. வெடிகுண்டு மிரட்டலால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே சைபர் குற்றப்பிரிவு போலீசார் இமெயில் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications