ஆம்புலன்ஸ் இல்லாததால் மீண்டும் ஒரு அவலம்: இறந்த தாயின் சடலத்தை 12 கிமீ பைக்கில் கொண்டு சென்ற மகன்கள்
போபால்: ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் மத்திய பிரதேச மாநிலத்தில் இறந்த தாயாரின் உடலை 12 கி.மீ பைக்கில் கொண்டு சென்ற அவல சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிஷா மாநிலம், காலந்தி மாவட்டம், பவானிபட்டினா டிபி மருத்துவமனையில் தனாமஜி (42) என்பவர் தனது 12வயது மகளுடன் மனைவியை டிபி சிகிச்சைக்காக சேர்த்திருந்தார். சிகிச்சை பலனளிக்காமல் அவரது மனைவி இறந்துவிட்டார். மனைவியின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வழங்குவதற்கு மருத்துவமனை அதிகாரிகள் மறுத்து விட்டதால், அவரே தனது மனைவியின் உடலை சேலையால் சுற்றி தனது தோளில் சுமந்து சென்றார். 10 கி.மீ. தூரம் அவர் சுமந்து சென்றார்.

இந்த சம்பவம், சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்டுத்தியது. இந்நிலையில், அதுபோன்ற மற்றொரு சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேசம் உலாட் கிராமத்தை சேர்ந்த பர்வதா பாய் என்ற 70 வயது பெண் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவரது மகன் மருத்துவமனைக்கு அவரை அழைத்து செல்ல ஆம்புலன்சை பலமுறை அழைத்து உள்ளார். ஆனால் அவர்கள் வரமறுத்துவிட்டனர்.
இதனால் 2 மகன்கள் மோட்டார் சைக்கிளில் அந்த பெண்ணை நடுவில் உட்காரவைத்து 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அந்த பெண் உயிரிழந்து விட்டார். உடனடியாக மீண்டும் 12 கிலோமீட்டர் தூரத்திற்கு அந்த பெண்ணின் உடலை மோட்டார் சைக்கிளிலேயே கொண்டு வந்து உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications