சிறைக்குப் போகும் 2வது பெரிய பாலிவுட் நடிகர் சல்மான்...!
மும்பை: சஞ்சய் தத்தைத் தொடர்ந்து சிறைக்குப் போகும் பாலிவுட் நடிகர்கள் வரிசையில் இணைந்துள்ளார் சலமான் கான்.
இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக வலம் வந்த சல்மான் கான் சிறைக்குப் போவது அவரது ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பாலிவுட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஏற்கனவே நடிகர் சஞ்சய் தத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது பெரிய நடிகராக சல்மான் கான் இந்த வரிசையில் சேர்ந்துள்ளார்.
கடந்த 1993ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அதில் பலர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் தொடர்புடையவராக நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார். அவர் மீது சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அபு சலேம் மற்றும் ரியாஸ் சித்திக் ஆகியோரிடமிருந்து இந்த ஆயுதங்களை அவர் பெற்றதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இந்த வழக்கி் 1993ம் ஆண்டு கைது செய்ய்பட்டார் சஞ்சய் தத். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர் மீண்டும் 1995ம் ஆம்டு டிசம்பரில் கைது செய்யப்பட்டு 1997ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜாமீனில் விடுதலையானார்.
பின்னர் மீண்டும் 2006ம் ஆண்டு அவர் கைது செய்ய்பட்டார். மொத்தமாக 3 முறை கைது செய்யப்பட்டபோது அவர் ஆர்தர் சாலை சிறை மற்றும் புனே சிறையில் 7 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார்.
இந்த வழக்கில் 2007ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி மும்பை தடா கோர்ட் சஞ்சய் தத்துக்கு 6 வருட சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து மீண்டும் கைதானார் சஞ்சய் தத். இதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் 2013ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தத் தண்டனையை உறுதி செய்தது.
தற்போது சஞ்சய் தத் சிறையில் இருந்து வரும் நிலையில் இன்னொரு முக்கிய பாலிவுட் நடிகர் சிறைக்குப் போவது பாலிவுட்டை அதிர வைத்துள்ளது. சல்மான் கானின் ரசிகர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications