ஷாக்.. நடக்க கூட முடியல! மம்தா பானர்ஜியை கைத்தாங்கலாக மருத்துவமனையில் அனுமதித்த டாக்டர்! வீடியோ
கொல்கத்தா: உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்காக சென்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பயணித்த ஹெலிகாப்டர் இன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் மம்தா பானர்ஜி காயமடைந்த நிலையில் அவரால் தனியாக நடக்க கூட முடியவில்லை. இதனால் அவரை பெண் டாக்டர் கைத்தாங்கலாக அழைத்து சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். இங்கு சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் போன்று உள்ளாட்சி தேர்தலும் விறுவிறுப்பாக நடக்கும். குறிப்பாக உள்ளாட்சி தேர்தலின்போது பெரிய அளவில் வன்முறைகள் கூட நடந்த வரலாறுகள் உள்ளன.

இந்நிலையில் தான் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் மூன்று அடுக்குகளாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் என்பது ஒரே கட்டமாக ஜூலை 8ம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மேலும் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் உள்ளாட்சியில் அதிக இடங்களை கைப்பற்றுவது என்பது மிகவும் முக்கியமாகும்.
இந்நிலையில் மம்தா பானர்ஜி தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளார். மாநிலம் முழுவதும் அவர் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி இன்று மம்தா பானர்ஜி ஜல்பைகுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அதன்பிறகு அவர் ஹெலிகாப்டரில் பாக்தோக்ரா விமான நிலையத்துக்கு ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தார்.
ஹெலிகாப்டர் பைகுந்தார்பூர் வனப்பகுதியின் மேலே பறந்து சென்றது. அப்போது மோசமான வானிலை நிலவியது. கனமழை உள்ளிட்டவற்றால் ஹெலிகாப்டரை இயக்க பைலட்டால் முடியவில்லை. இதனால் அவர் திணறினார். இதையடுத்து அவசரமாக சிலிகுரி அருகே உள்ள செவோக் விமான தளத்தில் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது.
இதையடுத்து மம்தா பானர்ஜி அவசரமாக தரையிறங்கினார். இந்த வேளையில் மம்தா பானர்ஜியின் முதுகு மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. மோசமான வானிலை நிலவியபோது பைலட் திணறியதால் ஹெலிகாப்டர் குலுங்கியதாக கூறப்படுகிறது. இதனால் மம்தா பானர்ஜி காயமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
#WATCH | West Bengal CM Mamata Banerjee arrived at SSKM Hospital in Kolkata this evening.
— ANI (@ANI) June 27, 2023
Earlier today, her helicopter made an emergency landing at Sevoke Airbase due to low visibility. She was going to Bagdogra after addressing a public gathering at Krinti, Jalpaiguri. pic.twitter.com/HCt7vzsTM4
இதையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள மாநில அரசின் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் தற்போது ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் காரில் மம்தா பானர்ஜி மருத்துவமனை வளாகத்தில் வந்து இறங்குகிறார். அப்போது அவரால் சரியாக நடக்க முடியவில்லை. கால் மற்றும் முதுகில் ஏற்பட்ட காயம் தான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
இருப்பினும் அவர் காரில் இருந்து இறங்கி அங்கிருந்த மருத்துவர்களிடம் நடந்த சம்பவத்தை விவரித்தார். அதன்பிறகு மருத்துவமனைக்குள் நடந்து சென்றார். இந்த வேளையில் மம்தா பானர்ஜியை பெண் டாக்டர் ஒருவர் கைத்தாங்கலாக பிடித்த நிலையில் அவர் மெதுவாக நடந்து மருத்துவமனைக்குள் சென்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இது மம்தா பானர்ஜியின் கட்சியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications