தண்டனை பெற்ற லாலு, ஜெகதீஷ் சர்மா எம்பிக்களை பதவி நீக்கம் செய்ய வாகன்வதி வலியுறுத்தல்
டெல்லி: குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற லாலு பிரசாத், ஜெகதீஷ் சர்மா ஆகியோர் எம்.பி. பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டதாக அறிவிக்க வேண்டும் என்று அட்டார்னி ஜெனரல் வாகன்வதி வலியுறுத்தியுள்ளார்.
கால்நடை தீவன ஊழல் வழக்கில் எம்.பிக்களான லாலு பிரசாத், ஜெகதீஷ் சர்மா ஆகியோர் நீதிமன்றத்தால் குற்றவாளி என்று கூறி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இப்படி குற்றவழக்குகளில் தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக பதவி இழப்பர் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு அளித்திருந்தது.
இதனடிப்படையில் லாலு பிரசாத், ஜெகதீஷ் சர்மா ஆகியோரது எம்பி பதவி இடங்கள் காலியாக உள்ளதாக லோக்சபா செயலர் அறிவிக்கை வெளிட வேண்டும் என்று அட்டர்னி ஜெனரல் வாகன்வதி வலியுறுத்தியுள்ளார்.
அப்படி அறிவிக்காவிட்டால் உச் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கொள்ளப்படும் என்று மீண்டும் வாகன்வதி கருத்து தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications