ஹெலிகாப்டர் ஊழலை மறைக்க பத்திரிகையாளர்களுக்கு ரூ.50 கோடி லஞ்சம்! விளக்கம் கேட்கிறது சுப்ரீம்கோர்ட்
டெல்லி: நாட்டின் முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக இத்தாலியை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேன்ட் நிறுவனமிடம் இருந்து சொகுசு ஹெலிகாப்டரை வாங்க காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒப்பந்தம் செய்தது.
இதற்காக முன் பணமாக ரூ.2,360 கோடி மதிப்பிலான வங்கி ஒப்பந்தங்களை அந்நிறுவனத்திற்கு அளித்திருந்தது. இதனிடையே ரூ.360 கோடி அளவுக்கு லஞ்சம், முறைகேடுகள் நடந்தது அம்பலமானதால், ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இது குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. அமலாக்கத்துறையும் களத்தில் இறங்கியுள்ளது.

இவ்வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த ஊழலில் முன்னணி பத்திரிகையாளர்களுக்கு உள்ள தொடர்பு பற்றிய விவரத்தை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுகுறித்து தாக்கல் செய்யப்ப்டட மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட் இந்த விவரங்களை கேட்டுள்ளது.
ஹெலிகாப்டர் ஊழல் அம்பலமானது முதலே டெல்லியிலுள்ள பத்திரிகையாளர்கள் சிலருக்கும் இதில் தொடர்புள்ளதாக பேசப்பட்டு வருகிறது. ஒரு பத்திரிகையாளருக்கு அதிகபட்சமாக 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. 360 கோடி லஞ்சம் பல முக்கிய பிரமுகர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 50 கோடி பத்திரிகையாளர்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒரு பத்திரிகையாளருக்கும் அவரது மனைவிக்காகவும் ரூ.28 லட்சம் செலவிப்பட்டதாம். இதுகுறித்த தகவல் அமலாக்கத்துறையிடம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், அதுகுறித்த விவரங்களை சுப்ரீம் கோர்ட் இன்று கேட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications