அடுத்த அதிர்ச்சி! குஜராத் முக்கிய காங். தலைவர் ராஜினாமா! நாளை ராகுல் செல்லும் நிலையில் இன்று ஷாக்
காந்திநகர்: குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் குஜராத் மாநில முக்கிய காங்கிரஸ் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நாளை ராகுல்காந்தி குஜராத் பொதுக்கூட்டத்தில் பேச உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
காங்கிரஸ் கட்சி கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்தது. அதன்பிறகு தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்து வருகிறது.
இதனால் 2019ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. ஒரு காலத்தில் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி இருந்த நிலையில் தற்போது சில மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் ஆட்சி உள்ளது.

குலாம் நபி ஆசாத் ராஜினாமா
இத்தகைய சூழலில் தான் காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தேசிய தலைவர் இல்லாத நிலை உள்ளது. மேலும் மூத்த தலைவர்கள் பலரும் கட்சி மேலிடம் மீது அதிருப்தியில் உள்ளனர். காங்கிரஸை பொறுத்தமட்டில் ஜி23 என்ற அதிருப்தியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின்மூத்த தலைவராக இருந்த குலாம்நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். விரைவில் ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என எதிர்க்கப்படும் நிலையில் அவர் காங்கிரஸ் கட்சிக்கு முழுக்கு போட்டுள்ளார். தற்போது அவர் ஜம்மு காஷ்மீரில் புதிதாக கட்சி துவங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இவரை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த ஜெய்வீர் ஜெர்கில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தொடரும் ராஜினாமா
இதன் தொடர்ச்சியாக இன்னும் சில மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறுவார்கள் என பாஜகவினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் தான் குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் விலகி உள்ளார். அதாவது குஜராத் மாநில இளைஞர் காங்கிரஸ் பிரிவு தலைவர் விஸ்வநாத்சின் வகேலா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நாளை ராகுல்காந்தி விசிட்
குஜராத் மாநிலத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் திட்டமிட்டு வந்த நிலையில் தான் விஸ்வநாத்சின் வகேலா ராஜினாமா செய்துள்ளார். மேலும் நாளை ராகுல்காந்தி குஜராத் செல்ல உள்ள நிலையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். நாளை குஜராத் செல்லும் ராகுல் காந்தி அகமதாபாத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.

பாஜக கிண்டல்
இதுபற்றி பாஜகவின் செய்தி தொடர்பாளர் ருத்விஜ் பட்டீல் கூறுகையில், ‛‛காங்கிரஸின் ஒருங்கிணைந்த பிரசாரத்துக்காக ராகுல்காந்தி நாளை குஜராத் வர உள்ள நிலையில் இங்கு காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறும் பிரசாரம் நடக்கிறது'' என கிண்டல் செய்துள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications