பணத்தை ஆட்டையை போட்ட கணவன்... கேள்வி கேட்ட மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கொடூரம்
பர்சில் இருந்து 3000 ரூபாய் பணத்தை எடுத்தியா என்று கேட்ட மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கொடூர கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். கணவன் கடித்து துப்பியதால் கடுமையாக பாதிப்படைந்த அந்த பெண்ணின் மூக்கில்
அகமதாபாத்: வேலைக்கு போகாமல் வெட்டியாக சுற்றிக்கொண்டிருந்த கணவன் ஒருவன் குடும்ப சண்டையில் மனைவியின் மூக்கைக் கடித்து காயப்படுத்தியிருக்கிறான். பர்ஸ்சில் இருந்து பணத்தை எடுத்தியா என்று கேள்வி கேட்டதற்காக மனைவியின் மூக்கை காயப்படுத்தி 15 தையல் போட வைத்திருக்கிறான். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் கோடாசார் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளனது.
பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் பெயர் ரேஷ்மா குல்வானி. 40 வயதாகும் ரேஷ்மாவின் கணவர் பெயர் கைலாஷ் குமார்.வேலையில்லாத வெட்டி ஆபிசர். ரேஷ்மா கைலாஷ் தம்பதியருக்கு மூன்று குழந்தைகள். பாவேஷ் கல்லூரியில் படிக்கிறார். பாவனா டியூசன் சென்டரில் வேலை செய்கிறார். தீபக் 12ஆம் வகுப்பு படிக்கிறார்.

வீட்டு வேலையும் செய்து கொண்டு, படிக்கும் பிள்ளைகளுக்கு அனைத்து வேலைகளை செய்து விட்டு வேலைக்கும் போய் சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். சம்பளப்பணத்தில் செலவு செய்தது போக அவசிய தேவைக்காக ரூ. 3000 பர்சில் வைத்திருந்தார். செவ்வாய்கிழமை பர்ஸை பார்த்த ரேஷ்மாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. பர்சில் இருந்த பணத்தை காணவில்லை. யார் எடுத்திருப்பார்கள் என்ற யோசனையில் பிள்ளைகளிடம் கேட்டார். அவர்களும் பணத்தை பார்க்கவில்லை என்று கூறிவிட்டனர்.
தனது கணவன் கைலாஷ்குமாரிடம் 3000 பணத்தை எடுத்தியா என்று கேட்டார். அதற்கு முதலில் மறுத்த அவன், பின்னர் பணத்தை எடுத்து செலவு செய்து விட்டதாக கூறினான். அதற்கு கணவனை திட்டி சண்டை போட்டார் ரேஷ்மா. கைலாஷ் குமாரின் கோபம் அதிகரித்தது. மாறி மாறி சண்டை போட்டு திட்டிக்கொண்டனர்.
ஆத்திரமடைந்த கைலாஷ் குமார் ரேஷ்மாவின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்துச்சென்று கீழே வீசினார். முகத்தின் அருகே வாயை கொண்டு போய் மூக்கை கடித்து துப்பினார். இதில் ரேஷ்மா அலறித்துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ரேஷ்மாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ரேஷ்மா அளித்த புகாரின் பேரில் கைலாஷ் குமார் மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். படுகாயமடைந்த ரேஷ்மாவின் மூக்கின் மேல் 15 தையல் போடப்பட்டுள்ளது. ஐசியுவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். வெட்டியாக ஊரைச்சுற்றிய கணவன், பர்ஸில் இருந்து பணத்தை எடுத்ததோடு
கேள்வி கேட்ட மனைவியை படுகாயப்படுத்திய சம்பவம் அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications