அதிமுக அரசுக்கு ஜூலை 17 வரை ஆபத்தில்லை... எப்படி தெரியுமா?
குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெறும் ஜூலை 17ஆம் தேதிவரை தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு எந்த வித ஆபத்தும் இருக்காது என்று கூறப்படுகிறது.
டெல்லி: தமிழக அரசியல் வானில் தினம் தினம் ஒரு காட்சிகள் அரங்கேறுகின்றன. எம்எல்ஏவாக நீடிப்போமா? அமைச்சராக இருப்போமா என்று அதிமுகவினருக்கே நம்பிக்கையில்லாமல் இருக்கிறது. எல்லாம் குடியரசுத்தலைவர் தேர்தல் வரைதான். அதன்பிறகு அதிமுக அரசு ஆட்டம் கண்டுவிடும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து கூறியுள்ளனர்.
தமிழத்தில் அதிமுகவுக்கு மொத்தமுள்ள 134 எம்.எல்.ஏ.,க்களில் அதிமுக அம்மா அணிக்கு 122 எம்.எல்.ஏ.,க்களும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணிக்கு 12 எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர். மொத்தம் 50 எம்.பிக்கள் உள்ளனர்.
ஓபிஎஸ்க்கு ஆதரவாக 12 பேரும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 32 பேரும் மற்றவர்கள் முதல்வர் எடப்பாடிக்கு ஆதரவாகவும் உள்ளனர். அனைவருமே பாஜகவிற்கு ஆதரவாக வாக்களித்தால் மட்டுமே குடியரசுத்தலைவர் தேர்தலில் நினைத்த வெற்றியை பாஜக அடைய முடியும்.
குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தமிழகத்திற்கு வந்து குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்ற நோக்கத்தில், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தனது தமிழகப் பயணத்தை ஒத்தி வைத்து இருக்கிறார் என்றே கூறப்படுகிறது.

குடியரசுத்தலைவர் தேர்தல்
இந்திய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குடியரசு தலைவராக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதி முடிவடைகிறது. இந்த தேதிக்குள் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

கொறடா உத்தரவு செல்லாது
இந்நிலையில் இதற்கான தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பார்கள். இந்தத் தேர்தலில் கொறடா உத்தரவு மக்கள் பிரதிநிதிகளை கட்டுப்படுத்தாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்களிக்கும் முறை
குடியரசு தலைவர் தேர்தலில் மொத்தம் 4,120 எம்எல்ஏக்களும், 776 எம்.பிக்களும் வாக்களிக்க உள்ளனர்.
எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் மொத்த வாக்கு மதிப்பு - 10 லட்சத்து 98 ஆயிரத்து 822 ஆகும். இதில் குடியரசுத் தலைவராவதற்கு 5லட்சத்து 49ஆயிரத்து 442 வாக்குகள் தேவைப்படுகிறது.

பாஜகவின் தேவை
தற்போது மத்தியில் ஆளும் பாஜக வின் வசம் உள்ள வாக்கு மதிப்பு 5 லட்சத்து 37 ஆயிரத்து 614 ஆகும். எனவே பாஜக நிறுத்தும் வேட்பாளர் குடியரசுத் தலைவராவதற்கு மேலும் 11 ஆயிரத்து 828 வாக்குகள் தேவைப்படுகிறது.

எதிர்கட்சிகள்
இத்தேர்தலில் எதிர்கட்சிகள் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளன. எதிர்கட்சிகளின் வாக்கு மதிப்பு 4 லட்சத்து 02 ஆயிரத்து 230 ஆகும். எனவே எதிர்கட்சிகளுக்கு 1 லட்சத்து 47 ஆயிரத்து 212 வாக்குகள் மேலும் தேவைப்படுகிறது.

அதிமுக வாக்கு வங்கி
அதிமுகவுக்கு மொத்தம் 5.36 சதவீத வாக்கு வங்கி உள்ளது. அதிமுக அம்மா அணியின் சார்பில் - 49 ஆயிரத்து 324 வாக்குகளும், அதிமுக புரட்சி தலைவி அம்மா - 9 ஆயிரத்து 900 வாக்குகளும் உள்ளன.

அணி அணியாக அதிமுக
தமிழத்தில் அதிமுகவுக்கு மொத்தமுள்ள 134 எம்.எல்.ஏ.,க்களில் அதிமுக அம்மா அணிக்கு 122 எம்.எல்.ஏ.,க்களும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணிக்கு 12 எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர். மொத்தம் 50 எம்.பி.,க்கள் உள்ளனர். இவர்களில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக 12 பேரும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 32 பேரும் மற்றவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாகவும் உள்ளனர்.

இணைப்பு பேச்சு
கடந்த சில மாதங்களாகவே எடப்பாடி பழனிச்சாமி அணியும், ஓபிஎஸ் அணியும் இணைய போவதாக கூறி வருகின்றன. இடையே திஹார் சிறையில் இருந்து வந்த டிடிவி தினகரனும் தனக்கு ஆதரவு அணி ஒன்றை உருவாக்கியுள்ளார். இது பாஜகவின் கணக்கில் மிகப்பெரிய பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளது. 3 அணி எம்எல்ஏக்கள், எம்பிக்களையும் எப்படி தங்களின் ஆதரவாளர்களாக திருப்ப முடியும் என்று யோசிக்கிறது.

ஜூலை 17
அதுவரைக்கும் தமிழகத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த பாஜக நினைக்காது. ஏனெனில் அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே குடியரசுத்தலைவர் தலைவர் தேர்தலுக்கு அனைத்து வாக்குகளும் கிடைக்கும்.

ஆட்டம் காணும் அதிமுக
ஜூலை 17 வரை அதிமுக அரசுக்கு எந்த வித ஆபத்தையும் ஏற்படுத்த பாஜக நினைக்காது என்றே கூறப்படுகிறது. குடியரசுத்தலைவர் தேர்தலுக்கு எதிர்கட்சி சார்பில் வேட்பாளர்களை யாரையும் நிறுத்த முன் வராத பட்சத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை. அதன் பின்னர், அதாவது ஜூலை 17ஆம் தேதிக்குப் பின்னர் அதிமுக எம்எல்ஏக்கள் ஆளுக்கொரு பக்கம் சிதறுவது உறுதி என்றும் அது தானாக நிகழும் அல்லது நிகழ்த்தப்படும் என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications