ஜாலி கேர்ள் ப்ரியா போய் தற்கொலையா?, நம்பவே முடியல: எய்ம்ஸ் டாக்டர்கள் அதிர்ச்சி
டெல்லி: ப்ரியா வேதி தற்கொலை செய்து கொண்டார் என்பதை நம்பவே முடியவில்லை என அவருடன் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் ப்ரியா வேதி(31) தனது ஓரினச்சேர்க்கையாளர் கணவர் டாக்டர் கமல் வேதியின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் ப்ரியா பற்றி எய்ம்ஸ் மருத்துவர்கள் கூறுகையில்,

ப்ரியா
ப்ரியா சாதாரணமாகத் தான் இருந்தார். அவர் எந்தவித மன வேதனையில் இருந்ததாகத் தெரியவில்லை. அவர் மன உளைச்சலில் இருந்ததற்கான அறிகுறியே இல்லை என்று மூத்த டாக்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கவலையா?
நான் ப்ரியாவுடன் பல நாட்கள் பணியாற்றியுள்ளேன். அவருடன் நிறைய பேசியுள்ளேன். நானும், அவரும் ஆபரேஷன் தியேட்டர் பணியில் பலமுறை இருந்தபோது நிறைய பேசியுள்ளோம். ஆனால் அப்போது எல்லாம் அவர் தனது மனதில் இருந்த எதையும் தெரிவிக்கவில்லை. இன்னொரு டாக்டருக்கு விவாகரத்து ஆனது. அவர் தான் அது பற்றி பேசியுள்ளார். ப்ரியா தனது திருமண வாழ்க்கை பற்றி எதுவுமே கூறியது இல்லை என்கிறார் மற்றொரு மருத்துவர்.

ஜோக்
ப்ரியா தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி குறை கூறியது இல்லை. சொல்லப் போனால் ஆபரேஷன் தியேட்டரில் அவர் தான் அதிகமாக ஜோக்கடித்துக் கொண்டிருப்பார் என்று அவருடன் பணிபுரிந்த டாக்டர் ஒருவர் கூறியுள்ளார்.

அறிவாளி
ப்ரியா அழகான, அறிவான பெண். அவர் எய்ம்ஸில் படிக்காவிட்டாலும் நல்ல அறிவாளி. அவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியை கேட்டு நாங்கள் எல்லாம் அதிர்ச்சி அடைந்தோம் என ஒரு மருத்துவர் தெரிவித்துள்ளார்.

திருமணம்
ப்ரியா எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் டாக்டர்களுக்கான குடியிருப்பில் கணவருடன் வசித்து வந்தார். அவருக்கும், கமலுக்கும் இடையே எந்த பிரச்சனையும் இருந்ததாக தங்களுக்கு தெரியவில்லை என்கிறார்கள் அக்கம்பக்கத்தில் வசிக்கும் டாக்டர்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications