எல்லாம் அறிக்கையில் இருக்கிறது.. திரும்ப, திரும்ப அதையே சொன்ன தமிழக சுகாதாரத்துறை செயலாளர்
டெல்லி: தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் டெல்லியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: மாநில அரசின் கோரிக்கை அடிப்படையில் எய்ம்ஸ் நிபுணர்கள் அப்பல்லோ வருகை தந்தனர். அதுகுறித்த விவரத்தை தற்போது மாநில அரசு கேட்டுக்கொண்டது. எனவே அறிக்கையை கொடுத்துள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு உலக தரம் வாய்ந்த சிகிச்சை வழங்கப்பட்டதாக எய்ம்ஸ் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எய்ம்ஸ் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
(ஜெ. சிகிச்சை: தமிழக அரசு வெளியிட்ட அப்பல்லோ மருத்துமனை. எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கைகள்)

எய்ம்ஸ் அறிக்கையில் ஒரு சிறு திருத்தத்தையும் தமிழக அரசு செய்யவில்லை. இந்த நேரத்தில் அறிக்கையை வெளியிடுவதற்கு பின்புலம் எதுவும் கிடையாது. தேவையின் அடிப்படையில் வெளிநாட்டு நிபுணர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.
ஏற்கனவே தமிழக அரசு ஹைகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ள அம்சங்கள்தான் எய்ம்ஸ், அப்பல்லோ அறிக்கைகளிலும் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிருபர்கள் கேட்ட கேள்விக்கெல்லாம் அறிக்கையில் பதில் உள்ளது என்று மட்டுமே அவர் தெரிவித்தார். பதில் அளிக்கவில்லை. மேலும், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அரசு சுகாதாரத்துறை சார்பில் ஒரு பதிலை கூட கூறவில்லை. அறிக்கையையும் வெளியிடவில்லை. ஆனால் இப்போது திடீரென அறிக்கை வெளியிட்டதோடு சரியாக பதிலும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications