வயதான தாயை சரக்கு ரயில் பெட்டியில் போட்டுவிட்டு ஓடிய மகன் : ஒடிஷாவில் அவலம்
ஒடிஷாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட தாயை பெற்ற மகனே சரக்கு ரயில் பெட்டியில் விட்டுச் சென்றுள்ளார்.
ஜர்ஷுகுடா : ஒடிஷாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட தனது தாயை மகன் ஒருவர் சரக்கு ரயில் பெட்டியில் விட்டுச்சென்றுள்ள அவலம் நேர்ந்துள்ளது.
ஒடிஷா மாநிலத்தில் உள்ள பெல்பஹார் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, உடல் நலம் மோசமடைந்து இருந்த தாயை மருத்துவமனையில் அனுமதிக்காமல் சரக்கு ரயில் பெட்டியில் விட்டுச் சென்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. நான்கு நாட்களுக்கு பிறகு மோசமான நிலையில் , அந்த தாய் மீட்கப்பட்டு உள்ளார்.

பெல்பஹார் பகுதியைச் சேர்ந்த இந்திரா மெஹர் இவருக்கு வயது 52. இவரது கணவர் கோவிந்த் மெஹர். இவர்கள் அப்பகுதியில் உள்ள குமதேரா பகுதியில் வசித்து வந்தனர். இந்த தம்பதியின் ஒரே மகன் காகேஷ்வர் மெஹர். தனது தாயை வீட்டில் வைத்து பராமரிக்க விரும்பாத காகேஷ்வர் ஜர்ஷுகுடா பகுதியில் உள்ள ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தனது தாய் இந்திராவை சேர்த்துவிட்டார்.
ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த இந்திரா மெஹரின் சர்க்கரை நோயின் அளவு கூடியதால் காப்பக நிர்வாகிகள் காகேஷ்வரை அழைத்து இந்திராவை வீட்டிற்கு அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு அனுப்பி வைத்தனர்.
காப்பகத்தில் இருந்து தனது தாயை கட்ந்த மாதம் நவம்பர் 30ம் தேதி அழைத்துச்சென்ற காகேஷ்வர் மருத்துவமனைக்கு கூட்டிச்செல்லாமல், பெல்பஹார் ரயில் நிலையத்தில் நின்று இருந்த நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயிலில் போட்டு விட்டுச் சென்றுள்ளார்.
நான்கு நாட்களாக உணவு, தண்ணீர் எதுவும் இன்றி கவனிப்பாரற்று கிடந்த இந்திராவை ரயில்பெட்டியை சுத்தம் செய்ய வந்த ஊழியர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ரயில்வே நிர்வாக அதிகாரிகளிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக ரயில்வே நிர்வாகத்தினர் இந்திராவை மருத்துவ சிகிச்சைக்கு சேர்க்க ஏற்பாடு செய்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அளிக்கப்பட்டுள்ள புகாரின் பேரில், போலீஸார் காகேஷ்வரை தேடி வருகின்றனர். பெற்ற தாயை மகனே அனாதையாக ரயில் பெட்டியில் விட்டுச்சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications