Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குஜராத்தில் ஒவைசிக்கு எதிர்ப்பு.. சொந்தக் கட்சியினரே 'B' டீம் என விமர்சிக்கும் பரிதாபம்.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: குஜராத் சட்டமன்றத் தேர்தலில் அசாசுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லிமின் கட்சி (ஏஐஎம்ஐஎம்) போட்டியிடுவதற்கு அவரது சொந்தக் கட்சிக்காரர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுவரை அவரது கட்சியை பிற கட்சிகள்தான் பாஜகவின் 'B' டீம் என விமர்சிக்க தொடங்கியுள்ளனர். மேலும், ஒவைசியின் செயல்பாட்டின் மீதான அதிருப்தி காரணமாக பல தொண்டர்கள் தேர்தல் பணியாற்றவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்றுள்ள அசாசுதீன் ஒவைசி, யார் - யார் எல்லாம் தேர்தல் பணியை செய்யவில்லை என்ற லிஸ்ட்டை கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கவனம் ஈர்த்த ஒவைசியின் அரசியல்

கவனம் ஈர்த்த ஒவைசியின் அரசியல்

பாஜகவை ஆரம்பம் முதலாகவே கடுமையாக விமர்சிக்கும் கட்சிகளில் ஒன்று அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லிமின் கட்சி. இந்தக் கட்சியின் தலைவரான அசாசுதீன் ஒவைசி ஹைதராபாத் எம்.பி.யாக உள்ளார். முதலில், ஹைதராபாத் மற்றும் தெலங்கானாவின் சில பகுதிகளில் மட்டுமே ஒவைசியின் கட்சி போட்டியிட்டு வந்தது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் பதவியில் அமர்ந்தது முதல், இதுவரை தாங்கள் கால் பதிக்காத மாநிலங்களில் கூட ஒவைசி கட்சி போட்டியிடத் தொடங்கியது. "இந்தியா முழுவதும் பாஜகவை எதிர்ப்போம்" என்ற முழக்கத்துடன் களமிறங்கிய அசாதுதீன் ஒவைசி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தற்போது குஜராத் என பாஜக எங்கெல்லாம் போட்டியிடுகிறதோ அங்கெல்லாம் தானும் போட்டியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறது.

பரவலாகும் பாஜக 'B' டீம் விமர்சனம்

பரவலாகும் பாஜக 'B' டீம் விமர்சனம்

ஆரம்பத்தில், பாஜக மீதான கோபத்தால் ஒவைசி இப்படி செய்கிறார் என பரவலாக கருதப்பட்டது. ஆனால், ஒவ்வொரு மாநிலத்தின் தேர்தல் முடிவுகளும், அதுசார்ந்த புள்ளிவிவரங்களும் வெளிவரும் போது தான், ஒவைசி மீது ஒரு விமர்சனம் வைக்கப்பட தொடங்கியது. அதுதான் பாஜகவின் 'B' டீம் என்ற விமர்சனம். ஏனெனில், பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக இருந்த மாநிலங்களில் எல்லாம் பாஜக ஜெயித்ததற்கு தெரிந்தோ, தெரியாமலோ ஒவைசியின் கட்சி முக்கிய பங்கு வகித்திருக்கிறது. அதாவது, பாஜகவுக்கு எதிரான முஸ்லிம் மக்களின் வாக்குகளை பிரதான எதிர்க்கட்சிக்கு செல்ல விடாமல் அவற்றை ஒவைசி கட்சி பிரித்துவிடுகிறது என்பதே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு ஆகும்.

சொந்தக் கட்சியினருக்கே சந்தேகம்

சொந்தக் கட்சியினருக்கே சந்தேகம்

இந்தக் குற்றச்சாட்டை முதலில் முன்வைத்த போது அதற்கு கடுமையாக எதிர்வினை ஆற்றி வந்த ஒவைசி கட்சித் தொண்டர்களே, தற்போது அதை ஒப்புக்கொண்டு ஒவைசியை விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில், குஜராத் சட்டமன்றத் தேர்தலில் நமது கட்சி போட்டியிட வேண்டாம் என ஏஐஎம்ஐஎம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், தலைவர்களுமே அசாசுதீன் ஒவைசிக்கு கடிதம் எழுதியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. "எப்படியும் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுகியில் கூட நாம் ஜெயிக்கப்போவதில்லை. அப்படி இருக்கையில், நாம் போட்டியிட்டால் முஸ்லிம் வாக்குகள் பிரிந்து அது பாஜகவுக்கே சாதகமாக இருக்கும்" என அந்தக் கடிதத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் பணி செய்யாத நிர்வாகிகள்

தேர்தல் பணி செய்யாத நிர்வாகிகள்

ஆனால், யார் பேச்சையும் கேட்காமல் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் 19 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார் அசாசுதீன் ஒவைசி. அதுவும், இந்தத் தொகுதிகள் யாவும் காங்கிரஸ் பலமாக இருக்கும் தொகுதிகள். "பாஜக தான் எதிரி என்றால் அக்கட்சி எங்கு வலுவாக இருக்கிறதோ அங்கு வேட்பாளர்களை நிறுத்த வேண்டியதுதானே.. அதை விட்டுவிட்டு ஏன் காங்கிரஸை ஒவைசி குறிவைக்க வேண்டும்?" என அவரது கட்சி நிர்வாகிகளே கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர். அதுமட்டுமல்லாமல், பெரும்பாலான ஏஐஎம்ஐஎம் தொண்டர்களும், நிர்வாகிகளும் குஜராத்தில் தேர்தல் பணியையும் செய்யவில்லை. மேலும், ஏஐஎம்ஐஎம் கட்சி பாஜகவின் 'B' டீம் என்றும், 'பச்சை தாமரை' (பாஜக சின்னம் காவி தாமரை) எனவும் அக்கட்சியினரே விமர்சிக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சொந்தக் கட்சியினரே 'B' டீம் என விமர்சிக்க தொடங்கியுள்ளதால் அசாதுதீன் ஒவைசி கடும் அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+