மீண்டும் நடந்து முடிந்தது அகில இந்திய நுழைவுத் தேர்வு- 17 ஆம் தேதியன்று ரிசல்ட்!
டெல்லி: சிபிஎஸ்இ நடத்தும் அகில இந்திய நுழைவுத்தேர்வானது இன்று தொடங்கி நடைபெற்றது. இந்தியா முழுவதும் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். இந்த தேர்வு காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் 1,000 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 17 ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 3 ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 6 லட்சத்து 30 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதற்கிடையே மருத்துவ நுழைவுத்தேர்வில் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தது. முறைகேடு நடைபெற்றதால் மீண்டும் மறுதேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இதையொட்டி இன்று இந்தியா முழுவதும் மருத்துவக்கல்வியில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான தேர்வாகும். காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நாடு முழுவதும் 1,000 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 17 ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அகில இந்திய மருத்துவக்கல்விக்கான மறு நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, முதல் முறையாக ஆடை கட்டுப்பாடுகளை விதித்து சி.பி.எஸ்.இ நிர்வாகம் கடந்த 9 ஆம் தேதி வழங்கிய ஹால்டிக்கெட்டில் விதிமுறைகள் வெளியிட்டது.
தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் தலையில் "ஸ்கார்ப்" அணிய கூடாது, முழுக்கை உடைகளை அணிய கூடாது, ஷூக்களுக்கு பதிலாக செருப்புகளே அணிய வேண்டும். சாதாரண மெல்லிய உடைகளை அணிய வேண்டும் என்று உடை கட்டுப்பாடுகளை விதித்து, ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டு இருந்தது. சி.பி.எஸ்.இயின் இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையொட்டி சி.பி.எஸ்.இ நிறுவனம் விதிமுறைகளை மாற்றி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மாணவிகள் ஸ்கார்ப் மற்றும் மெல்லிய ஆடைகள் அணிய தடை எதுவும் இல்லை என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து ஹால் டிக்கெட்டில் உள்ள மாணவ, மாணவிகள் தேர்வு நேரத்திற்கு முன்பாக 9.30 மணிக்கே தேர்வறைக்கு வந்து தேர்வினை எழுதினார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications