நாங்களும் வருவோம்ல: டிக்கெட் சலுகை கோதாவில் குதித்த ஏர் இந்தியா
டெல்லி: தனியார் விமான நிறுவனங்கள் சலுகையில் விலையில் பயண டிக்கெட்டுகளை அளித்து வருகையில் தேசிய நிறுவனமான ஏர் இந்தியாவும் உள்நாட்டு சேவைக்கான விமான டிக்கெட்டுகளை ரூ.1,777ல் இருந்து விற்பனை செய்கிறது.
தனியார் விமான நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர குறைந்த விலையில் பயண டிக்கெட்டுகளை அளித்து வருகின்றன. இந்நிலையில் தேசிய நிறுவனமான ஏர் இந்தியாவும் இந்த சலுகை கோதாவில் குதித்துள்ளது.

உள்நாட்டு சேவையில் 66 இடங்களுக்கான விமான டிக்கெட் விலைகள் ரூ.1,777ல் இருந்து துவங்குவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. ஜூன் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை ஏர் இந்தியா டிக்கெட்டுகள் சலுகை விலையில் கிடைக்கும். சலுகை விலையில் வாங்கப்படும் டிக்கெட்டுகளை ஜூலை 1ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை பயன்படுத்தலாம்.
டிக்கெட்டுகளை www.airindia.in இணையதளம், ஏர் இந்தியாவின் கட்டணமில்லா எண் 1800 180 1407 அல்லது அங்கீகரிக்கப்பட்ட டிராவல் ஏஜெண்டுகள் மூலமாக வாங்கலாம்.
விமான பயன்பாட்டை அதிகரிக்க பல விமான நிறுவனங்கள் இந்த ஆண்டு சலுகை விலையில் டிக்கெட்டுகளை விற்று வருகின்றன. கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை உள்நாட்டு விமானங்களில் 207 லட்சம் பேர் பயணம் செய்தனர். அந்த எண்ணிக்கை இந்த ஆண்டு 251.05 லட்சமாக அதிகரித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications