Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரவில் தூங்க முடியாதாம். ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பிய ஒருவருக்கும் புது பிரச்சனை! சோகம்

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் பலியாகினர். ஒருவர் மட்டுமே அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். இப்படி உயிர் தப்பிய அவர் விமான விபத்து நடந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் வேறு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சோகமான தகவல் வெளியாகி உள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் கடந்த மாதம் மதியம் 1:39 மணிக்கு லண்டனுக்கு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட அடுத்த ஒரு நிமிடத்தில் விபத்தில் சிக்கியது.

air-india-crash-survivor-vishwas-wakes-up-in-the-middle-of-the-night-and-finds-it-difficult-to-fall

விமான நிலையத்தின் அருகே உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. விமானத்தில் 230 பயணிகள் மற்றும் பைலட்டுகள் உள்பட 12 பணியாளர்கள் என்று மொத்தம் 242 பேர் பயணம் செய்தனர். இதில் 241 பேர் பலியாகினர். இதுதவிர விடுதியில் இருந்தவர்கள் உள்பட மேலும் 19 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் மொத்த உலகத்தையும் உலுக்கியது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். அவரது பெயர் விஸ்வாஸ் குமார் ரமேஷ். அவருக்கு வயது 40. விமானத்தில் அவசர வழியின் அருகே உள்ள 11 ஏ சீட்டில் இருந்த நிலையில் உயிர் தப்பினார். இவர் நம் நாட்டின் ஒருபகுதியாக இருக்கும் டையூவை சேர்ந்தவர். தற்போது பிரிட்டன் குடியுரிமை பெற்றுள்ளார்.

இவர் தனது சகோதரர் அஜய் உடன் டையூவிற்கு வந்து உறவினர்களை சந்தித்தார். அதன்பிறகு மீண்டும் லண்டன் புறப்பட்டு சென்றபோது தான் விமானம் விபத்தில் சிக்கியது. இதில் அஜய் இறந்த நிலையில் விஸ்வாஸ் குமார் ரமேஷ் மட்டும் உயிர் தப்பி உள்ளார்.

இந்நிலையில் தான் விஸ்வாஸ் குமார் ரமேஷ் தற்போது டையூவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். அவருடன் உறவினர் சன்னி இருக்கிறார். இந்நிலையில் தான் விஸ்வாஸ் குமார் ரமேஷ் புதிய பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சன்னி கூறியுள்ளார். இதுபற்றி சன்னி கூறுகையில், ‛‛வெளிநாடுகளில் எங்களின் உறவினர்கள் உள்ளனர். அவர்களில் பலரும் விஸ்வாஸ் உடல்நலம் குறித்த கேட்கின்றனர். ஆனால் அவர் யாரிடமும் பேசவில்லை. சில வேளைகளில் அவர் பேசினாலும் திடீரென்று அதிர்ச்சியில் உறைந்து விடுகிறார். அவரிடம் இருந்து பேச்சு வராமல் ஆகிவிடுகிறது.

விபத்து தொடர்பான அதிர்ச்சியில் இருந்தும், அவரது சகோதரர் அஜய் (விமானத்தில் உடன் பயணித்தவர்) இறந்தது உள்ளிட்டவற்றில் இருந்து விஸ்வாஸ் மீளவில்லை. விமான விபத்து நடந்த இடம், அவரது சகோதரர் அஜய் இறந்தது உள்ளிட்டவை தொடர்ந்து அவர் மனதில் தங்கி உள்ளது. இரவில் தூங்கும்போது திடீரென்று அவ்வப்போது எழுந்திருக்கிறார். அதன்பிறகு மீண்டும் தூங்குவதற்கு மிகவும் சிரமப்படுகிறார். 2 நாட்களுக்கு முன்பு மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றோம். மீண்டும் லண்டன் செல்வது தொடர்பாக இப்போது எந்த திட்டமும் அவரிடம் இல்லை. இப்போது தான் அவருக்கான சிகிச்சைகள் தொடங்கி உள்ளன'' என்றார். விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக தப்பிய விஸ்வாஸ் குமார் ரமேஷ் தற்போது மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அதரி்ச்சியில் இருந்து அவரை மீட்க தேவையான சிகிச்சைகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறார்.

முன்னதாக விஸ்வாஸ் குமார் ரமேஷ் காயங்களுடன் உயிர் தப்பினார். இதையடுத்து அவர் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன்பிறகு கடந்த மாதம் 17 ம் தேதி அவர் டிஸ்சார்ஜ் ஆனார். அன்றைய தினம் சகோதரர் அஜயின் உடல் அடையாளம் காணப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அஜயின் உடலை தோளில் சுமந்து இறுதி சடங்குகளை விஸ்வாஸ் குமார் ரமேஷ் செய்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+