Ahmedabad Air Crash: கருப்பு நிறத்தில் மாற்றப்பட்ட ஏர் இந்தியா ட்விட்டர் முகப்பு!
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து 242 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம், லண்டன் புறப்பட்டுச் சென்ற 5 நிமிடங்களில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்தவர்கள் பெரும்பாலும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என கருதப்படும் நிலையில் ஏர் இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் கருப்பு நிற டிபியை வைத்து இரங்கல் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா 171 விமானம் இன்று பகல் 1.43 மணிக்கு விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானம் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜூன் 12 ஆம் தேதி பகல் 1.38 மணிக்கு புறப்பட்டது.

விமானம் ஓடுபாதையிலிருந்து புறப்பட்டு மேலெழும்பியது. அப்போது விமானம் புறப்பட்ட வேகம் நீடிக்கவில்லை, மேலே எழும்புவதற்காகே பிரச்சினையானது. பின்னர் மேலெழும்ப முடியாது யூடர்ன் அடித்த விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியது.
விமானம் புறப்பட்ட அடுத்த நிமிடமே மே டே கால் எனும் அவசர அழைப்பு வந்தது. அழைப்பு வந்த ஒரு சில வினாடிகளிலேயே அழைப்புத் துண்டிக்கப்பட்டு விமானம் விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தவர்களில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் நாட்டவர், ஒரு கனடா நாட்டவர், 7 போர்ச்சுகல் நாட்டவர் என சொல்லப்படுகிறது.

குஜராத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி மீது ஏர் இந்தியா விமானம் விழுந்ததால் அந்த கட்டடம் தீப்பற்றி எரிந்ததாக சொல்லப்படுகிறது. இதில் விடுதி அறையில் தங்கியிருந்த 25 மாணவர்கள் காயமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த விமானத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி இருந்துள்ளார். இதையடுத்து அகமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு பின்னர் தொடங்கப்பட்டது. மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடப்பதாக தெரிவிக்கப்பட்டது. விமான விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என டாடா குழும தலைவர் சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.
விமான விபத்தில் விமானத்தில் 11 ஏ இருக்கையில் பயணித்த விஸ்வாஷ் குமார் என்ற பயணி உயிர் தப்பியதாக சொல்லப்படுகிறது. அகமதாபாத் விபத்தைத் தொடர்ந்து ஏர் இந்தியா தனது சமூகவலைதள பக்கத்தில் முகப்பு பக்கத்தை கருப்பு நிறத்தில் மாற்றியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications