ஏன் ஆண்களே இப்படி இருக்கிறீர்கள்?... எங்கு பார்த்தாலும் இதே பிரச்சினையாக இருக்கிறதே..!
டெல்லி: எங்கு பார்த்தாலும் ஆண்களின் பாலியல் சீண்டல்கள், அத்துமீறல்கள் அதிகரித்தவண்ணம் இருக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் விதம் விதமான பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு பலர் கைதாகியுள்ளனர். அதிலும் முக்கியமான பொறுப்புகளில் இருப்பவர்கள் பலர் சிக்கியுள்ளனர்.
இங்கிலாந்தில் இரண்டு இந்திய மருத்துவர்கள், நர்ஸுகளிடம் தவறாக நடந்து சிக்கியுள்ளனர். அதேபோல இந்தியாவில் குடியேற்றப் பிரிவு அதிகாரி ஒருவர் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஒரு பெண் பயணியிடம் அசிங்கமாக பேசி சிக்கி கைதாகியுள்ளார்.

மார்ச் 18ம் தேதி இந்தி சம்பவம் நடந்துள்ளது. இவரை நேற்று மாலை போலீஸார் கைது செய்தனர். இருப்பினும் சில மணி நேரத்திலேயே அவர் ஜாமீனில் வெளியே வந்து விட்டார்.
அந்த அதிகாரியின் பெயர் வினோத் குமார். மார்ச் 18ம் தேதி டெல்லியிலிருந்து ஹாங்காங் சென்ற விமானத்தைப் பிடிக்க பெங்களூரைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் வந்துள்ளார். அப்போது அவரிடம் மிகத் தவறான முறையில் பேசியுள்ளார் இந்த வினோத் குமார். அவரிடம் ஆபாசன முறையில் பேசிய அவர் தேவையி்லாமல் பல பர்சனல் கேள்விகளையும் கேட்டுள்ளார். அந்தப் பெண் அந்த அதிகாரியிடமிருந்து எப்படியோ தப்பி விமானத்தைப் பிடித்துள்ளார். கேள்விகள் கேட்டதோடு நிற்காமல், அவர் தன்னைப் பின் தொடர்ந்தும் வந்தது அச்சுறுத்தலைக் கொடுத்துள்ளார்.
தனது ஹாங்காங் பயணம் முடிந்து திரும்பிய அப்பெண் போலீஸில் முறைப்படி இதுகுறித்துப் புகார் கொடுத்தார். இதையடுத்து செயல்பட்ட போலீஸார் வினோத் குமாரை மிகச் சாதாரண பிரிவில் கைது செய்தனர். இதன் காரணமாக சில மணி நேரங்களிலேயே அவர் ஜாமீனில் வெளியே வந்து விட்டார். இதுகுறித்து விமான நிலைய துணை ஆணையர் எம்.ஐ.ஹைதர் கூறுகையில், கைது செய்யப்பட்ட அதிகாரி மீது ஜாமீனில் வெளிவரக் கூடிய பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்ததால் அவர் ஜாமீனில் வெளியே வந்து விட்டார் என்று தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications