ரூ.599க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ. 4 லட்சம் லைப் இன்சூரன்ஸ்! ஏர்டெல் அதிரடி அறிவிப்பு
டெல்லி: ஏர்டெல் ப்ரிபெய்டு வாடிக்கையாளர்கள் ரூ.599 பிளானை ரீசார்ஜ் செய்தால் ரூ. 4 லட்சம் லைப் இன்சூரன்ஸ் கவர் ஆகும் என ஏர்டெல் அறிவித்துள்ளது.
இதற்காக பாரதி ஆக்ஸா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏரடெல் ஒப்பந்தம் போட்டுள்ளது.
ஜியோ உடனான போட்டியை சமாளிக்க இன்சூரன்ஸ் என்ற ஆயுதத்தையும் சேர்த்து எடுத்துக்கொண்டு ஏர்டெல் நிறுவனம் இப்போது களம் இறங்கி உள்ளது. இத்திட்டம் வாடிக்கையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனிநபர் காப்பீடு
பாரதி ஏர்டெல் நிறுவனம் திங்கள்கிழமை புதிதாக ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் படி ப்ரிபெய்டு வாடிக்கையாளர்கள் ரூ.599க்கு ரீசார்ஜ் செய்தால் அவர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, எந்த நெட்வொர்க்குடன் பேசிக்கொள்ளும வகையில் அன்லிமிடெட் கால் வசதி, தினமும் 100 எஸ்எம்எஸ் வசதி, அத்துடன் 4லட்சம் ரூபாய்க்கான பாரதி ஆக்ஸா தனி நபர் காப்பீடு ஆகிய வசதிகள் கிடைக்கும்.

இன்சூரன்ஸ் வேலிடிட்டி
இந்த வசதிகள் அனைத்தும் ரூ.599 பிளான் வேலிடிட்டி முடியும் 84 நாட்களுக்கு கிடைக்கும் என்று ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. லைப் இன்சூரன்ஸ் வசதியும் 84 நாட்களுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் கோரிக்கைவிடுத்தால் வீட்டுக்கே இன்சூரன்ஸ் கடிதத்ததை அனுப்பி வைப்போம் என்றும் தெரிவித்துள்ளது.

ஆவணங்கள் தேவையில்லை
ஆனால் 4 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் வசதி என்பது 18 வயது முதல் 54 வயது உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அறிவித்துள்ளது. இதற்காக எந்த ஒரு ஆவணங்களும் தேவையில்லை. மருத்துவ சான்றிதழ்களும் தேவையில்லை. அவர்களுக்கு டிஜிட்டல் வடிவில் உடனடியாக இன்சூரன்ஸ் ஒப்பந்தம் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏர்டெல் தகவல்
ஒரு வாடிக்கையாளர் 599க்கு முதலில் ஏர்டெல் ஆப் அல்லது ஏர்டெல் ரீடெய்லரிடமோ ரீசார்ஜ் செய்த பிறகு காப்பீடு திட்டத்தில் சேர வேண்டும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் மூலம் ஆயுள் காப்பீடு வழங்குவதில் நாங்கள் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். இந்த செயலில் பாதி ஆக்ஸா லைஃப் இன்சூரன்ஸ் உடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என ஏர்டெல் நிறுவனத்தின் டெல்லி என்சிஆர் பகுதி சிஇஒ வாணி வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

படிப்படியாக விரிவு
ஏர்டெல் நிறுவனம் முதல் கட்டமாக இந்த சலுகையை டெல்லி உள்ளிட்ட சில குறிப்பிட்டமாநிலங்களுக்கு மட்டும் வழங்குகிறது. பின்னர் படிப்படியாக நாடு முழுவதும் விரிவுப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications