கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தில் இணைந்த AISA, SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு நெருக்கடி!!
'காக்கரோச் ஜனதா கட்சி' (CJP) சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று இந்த மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போராட்டத்திற்குப் புதிய பலம் சேர்க்கும் விதமாக, இந்தியாவின் மிக முக்கிய மற்றும் இடதுசாரி மாணவர் அமைப்புகளான அகில இந்திய மாணவர் கழகம் (AISA - All India Students' Association) மற்றும் இந்திய மாணவர் சங்கம் (SFI - Students' Federation of India) ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் போராட்டக் களத்தில் அதிரடியாகக் குதித்துள்ளனர்.
பல்வேறு வேறுபாடுகளைக் கடந்து, நாட்டின் ஒட்டுமொத்த மாணவர் சமூகத்தின் எதிர்காலத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுக்காக இடதுசாரி மாணவ அமைப்பு சிஜேபி (CJP) அமைப்போடு கைகோர்த்துள்ளனர். இவர்களின் வரவு, மத்திய கல்வி அமைச்சகத்திற்கு ஒரு மிகப்பெரிய அரசியல் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது.

டெல்லி போராட்டம்
இந்தியாவின் கல்வித்துறையையும், லட்சக்கணக்கான மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தையும் முற்றிலுமாகப் பதம் பார்த்து வரும் நீட் (NEET-UG 2026) வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) தேர்வு குளறுபடிகளுக்கு எதிராகத் தலைநகர் டெல்லியில் இன்று ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க இளைஞர் எழுச்சிப் போராட்டம் வெடித்துள்ளது.
இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டுள்ள அகில இந்திய மாணவர் கழகம் (AISA) என்பது இந்தியாவின் ஒரு முக்கிய இடதுசாரி மாணவர் அமைப்பாகும், இது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை (CPI(ML) Liberation) கட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்திய மாணவர் சங்கம் (SFI) என்பது இந்தியாவின் மிகப்பெரிய இடதுசாரி மாணவர் அமைப்பாகும், இது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPI(M)) கட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது டிசம்பர் 30, 1970 அன்று தொடங்கப்பட்டது.
சமூக வலைதளங்களில் விளையாட்டாக துவங்கி இன்று இயக்கமாகத் மாறி, தற்போது நாட்டின் பிரம்மாண்ட இளைஞர் சக்தியாக உருவெடுத்துள்ளது 'காக்கரோச் ஜனதா கட்சி' (CJP). நாளுக்கு நாள் வளர்ந்து ஒரு மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மாறியுள்ள இந்த வரலாற்றுப் போராட்டத்திற்கு, நாட்டின் முன்னணி இடதுசாரி மாணவர் அமைப்புகளும் தங்களின் நேரடி ஆதரவைத் தெரிவித்துக் களமிறங்கியுள்ளதால் ஒட்டுமொத்த டெல்லியே தற்போது ஸ்தம்பித்துப் போயுள்ளது.

தர்மேந்திர பிரதான் பதவி விலகல்
அமெரிக்காவில் இருந்து இன்று காலை டெல்லி வந்திறங்கிய காக்கரோச் ஜனதா கட்சியின் 30 வயது இளம் நிறுவனர் அபிஜீத் திப்கே தலைமையில் இந்த அமைதிப் போராட்டம் கட்டுக்கோப்பாக நடைபெற்று வருகிறது. டெல்லி காவல்துறையின் 5 மணி நேர அவசரக் கெடு மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் போராட்டம் நடந்து வருகிறது.
தேர்வு முறைகேடுகளுக்கு முழுப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, Dharmendra Pradhan step down என்ற முழக்கங்களை இடதுசாரி மற்றும் சிஜேபி மாணவர்கள் ஒருங்கிணைந்து எழுப்பி வருகின்றனர்.
-
அபிஜீத் வீட்டில் திடீர் போலீஸ் படை.. போராட்டத்திற்கு சென்ற அடுத்த நொடி! அபிஜீத் பெற்றோர் எங்கே? -
CJP: 'ஜெய் பீம்' மொமென்ட்.. இந்தியாவில் கால் வைத்ததும் அபிஜீத் திப்கே செய்த வேலை.. ஷாக்! -
மத்திய அரசுக்கு எதிராக மாணவர்களை வெகுண்டெழ வைத்த சிபிஎஸ்இ குளறுபடி! நடந்தது என்ன? -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications