ஐஸுக்கு அடிச்சது லக்கி.. குடியரசு தின விழாவில் பிரெஞ்சு அதிபருடன் விருந்து சாப்பிடுகிறார்!
மும்பை: நாளை நடைபெறும் குடியரசு தின விருந்தில் பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டேவுடன், ஒன்றாக அமர்ந்து மதிய விருந்து சாப்பிடும் அதிர்ஷ்டம் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்திருக்கிறது.
நாளை புது டெல்லியில் நடைபெறும் 67 வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே கலந்து கொள்கிறார்.
இதற்காக அவர் 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருக்கிறார். நாளை நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பிலும் பிராங்கோயிஸ் கலந்து கொள்கிறார்.

இந்நிலையில் பிரான்ஸ் அதிபருடன் விருந்து சாப்பிடும் அதிர்ஷ்டம் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்திருக்கிறது.
நடிகை ஐஸ்வர்யா ராய் இந்த விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரெஞ்சு நாட்டின் தூதர் பிரான்கோயிஸ் ரிச்சியர் ஸ்பெஷலான அழைப்பொன்றை விடுத்திருக்கிறார்.
ஐஸ்வர்யா தற்போது 'சர்ப்ஜித்' என்னும் பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இந்த விருந்தில் கலந்து கொள்ள அவர் இன்றிரவே மும்பையில் இருந்து விமானத்தில் கிளம்புகிறாராம்.
இதனால் 'சர்ப்ஜித்' படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்க படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர். நாளை நடைபெறும் இந்த விருந்தில் இந்தியாவில் பல்வேறு பதவிகளில் உள்ள உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ளுகின்றனர்.
இந்த விருந்தானது புது டெல்லியில் உள்ள மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் நடைபெறுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக காவல் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியளவில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு மட்டுமே இந்த விருந்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications