ஆகாஷ் டேப்லட்-4 ஏப்ரலில் சந்தைக்கு வரும்…. கபில்சிபல் அறிவிப்பு..

Subscribe to Oneindia Tamil

டெல்லி:ரூ.3,999 விலையில் ஆகாஷ்-4 டேப்லட் கம்ப்யூட்டர் விற்பனைக்கு வரும் என மத்திய அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார்.

விலை குறைவாக இருப்பதால் இந்த டேப்லெட் வங்குவதற்காக பலர் காத்திருப்போர் பட்டியலில் இருக்கின்றனர்.

இந்நிலையில், ஆகாஷ், ஆகாஷ்-2 டேப்லட்டுகளுக்கு அடுத்து மேம்படுத்தப்பட்ட ஆகாஷ்-4 டேப்லட் வெளிவர உள்ளது.

மலிவு விலை டேப்லட்:

மலிவு விலை டேப்லட்:

அரசின் மலிவு விலை டேப்லட் கம்ப்யூட்டரான "ஆகாஷ் 4" இன்னும் ஒன்றரை மாதங்களில் சந்தைக்கு வரும் என்றும், இதற்கான தயாரிப்பு ஒப்பந்தங்களுக்கு வினியோகத்துறை இயக்குநர் அனுமதி அளித்துள்ளதாகவும் மத்திய தொலைதொடர்பு அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார்.

7 அங்குலத்தில்:

7 அங்குலத்தில்:

ஆகாஷ் 4 டேப்லட் ஆனது 7 அங்குலத்தில் ஸ்கிராட்ச் ரெசிஸ்டெண்ட்,தொடுதிரை, பிரண்ட் கேமரா, 4 ஜி.பி சேமிப்பு வசதி வெளிவருகிறது.

எல்லா ஜியும் இருக்கு ஜி:

எல்லா ஜியும் இருக்கு ஜி:

வைஃபை இணைப்புடன் 2ஜி, 3ஜி மட்டுமின்றி 4ஜி இண்டர்நெட் வசதி உட்பட நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டிருக்கும். மேலும் 32 ஜி.பி வரையிலான மெமரி கார்டையும் உள்ளீடு செய்து கொள்ளலாம்.

மாணவர்களுக்காக:

மாணவர்களுக்காக:

மாணவர்களின் கல்வி பயன்பாட்டிற்காக வழங்கப்படும் அரசின் மலிவு விலை கம்ப்யூட்டரான ஆகாஷ் 4 டேப்லட்டின் விலை ரூ.3,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் டேப்லட்:

மத்திய அரசின் டேப்லட்:

கபில்சிபல் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தபோது உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில் "ஆகாஷ் திட்டம்" மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+