அல் ஜசீரா டிவிக்கு 5 நாள் தடை.. மத்திய அரசு அதிரடி!
டெல்லி: இந்தியாவின் தவறான வரைபடத்தைக் காட்டியதற்காக அல் ஜசீரா டிவிக்கு மத்திய அரசு 5 நாள் தடையை விதித்துள்ளது. இதனால் அல் ஜசீரா டிவி இந்தியாவில் தற்போது தெரியவில்லை.
அல் ஜசீரா டிவி சானல் ஒளிபரப்பாகும் எண்ணில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறையின் உத்தரவுப்படி இந்த சேனல், ஏப்ரல் 22ம் தேதி 00.01 மணியிலிருந்து 2015, ஏப்ரல் 27ம் தேதி 00.01 வரை ஒளிபரப்பப்பட மாட்டாது என்ற செய்தி இடம் பெற்றுள்ளது.

முன்னதாக 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் பலமுறை இந்த சானல் காட்டிய இந்திய வரைபடமானது தவறானதாக இருந்தது. குறிப்பா காஷ்மீரை இந்தியாவின் பகுதி இல்லை என்பது போல காட்டிய வரைபடங்களை இந்த சானல் காட்டியிருந்தது. இதுகுறித்து மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
இதுகுறித்து ஆராயுமாறு இந்திய சர்வேயர் ஜெனரலுக்கு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு. இதையடுத்து ஆராய்ந்த மத்திய சர்வேயர் ஜெனரல், மத்திய அரசு அளித்த அறிக்கையில், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகள் அதாவது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், அக்சய் சீன் ஆகிய பகுதிகள் அல் ஜசீரா காட்டிய வரைபடத்தில் இடம் பெறவில்லை. மேலும், இந்தியாவின் வரைபடத்தில் அந்தமான் தீவுகள், லட்சத் தீவுகள் ஆகியவையும் இடம் பெறவில்லை என்று கூறியிருந்தார்.

மேலும் முறையான வரைபடங்களை அல் ஜசீரா டிவி காட்டுவதில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தற்போது மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதற்கு அல் ஜசீரா டிவி கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய அரசு கட்டாயத் தணிக்கையை நடத்தியுள்ளது. மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications