ஹைதராபாத்தை இந்தியாவில் இருந்து விடுவித்து மீண்டும் நிஜாம் ஆட்சி- இது அல்-கொய்தாவின் ரகசிய பிரசாரம்!
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்/சென்னை: இந்தியாவில் ஹைதராபாத்தை விடுவித்து அங்கு மீண்டும் நிஜாம்கள் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்று பிரசாரத்தை மேற்கொண்டு அல்கொய்தா இயக்கம் முஸ்லிம் இளைஞர்களை தங்களது அமைப்பில் சேர்த்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தீவிரவாதிகளுக்கு உளவுத் தகவல்களை பரிமாறியதாக அண்மையில் ராணுவ சுபேதார் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் ஏராளமான தகவல்கள் தேசிய புலனாய்வு அமைப்பினருக்குக் கிடைத்துள்ளது.
அல்கொய்தா தீவிரவாதிகள் இந்தியாவில் தளம் அமைத்து தாக்குதல்கள் ஈடுபட முயற்சிப்பது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பினருக்கு கிடைத்த தகவல்கள்:

- இந்தியாவில் அல்கொய்தா இயக்கம் தனது தலைமையகத்தை ஹைதராபாத்தில் நிறுவுவதற்கான சதியில் ஈடுபட்டு வருகிறது.
- தமிழகம், கேரளா, கர்நாடகாவில் உள்ள முஸ்லிம் இளைஞர்களை அல்கொய்தாவில் இணைப்பதற்கு ஹைதராபாத் சரியான தலைநகரம் எனக் கருதப்படுகிறது.
- ஹைதராபாத்தை இந்தியாவிடம் இருந்து விடுவித்து மீண்டும் நிஜாம் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்ற பிரசாரத்தை முன்வைத்தே அல்கொய்தாவுக்கான ஆட்சேர்ப்பு முயற்சி நடைபெறுகிறது.
- மோட்டாசிம் என்பவரது முயற்சியில்தான் ஹைதராபாத்தில் அல்கொய்தா தலைமையகம் அமைக்கவும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
- ஹைதராபாத்தில் 8 சிலீப்பர் செல்கள் செயல்படுகின்றன. இந்த சிலீப்பர் செல்களில் ஏராளமான இளைஞர்கள் இணைந்துள்ளனர்.
- ஷாகித் பிலால் ஏற்கெனவே ஹர்கத் உல் ஜிஹாதி இஸ்லாமி என்ற தீவிரவாத இயக்கத்தை ஹைதராபாத்தில் நிறுவியிருந்தார்.
- முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளுடன் தொடர்புபடுத்தி பார்க்கும் போலீசாரின் அணுகுமுறைதான் அவர்களை தீவிரவாத இயக்கங்களுடன் இணைய வைக்கிறது.
- அல்கொய்தா இயக்கத்தில் உடனே இணைவதற்கு 350 இளைஞர்கள் தயராக இருக்கின்றனர்.
- கர்நாடகா, கேரளாவில் வலுவாக உள்ள சிமி அமைப்பும் தமிழகத்தின் அல் உம்மா அமைப்பும் இஸ்லாமிய சத்தார் சிபிர் என்ற இயக்கத்துடன் தொடர்பில் உள்ளவை. இவற்றுடன் அல்கொய்தாவும் கை கோர்த்துள்ளது.
- மேற்குவங்கத்தின் பர்த்வான் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும் ஹைதராபாத் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications