கணக்கு எடுத்த காமர்ஸ் டீச்சர்.. ஒட்டு மொத்த பள்ளியே ஃபெயிலாமே! அட இது என்னங்க கொடுமையா இருக்கு!
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் இரண்டு பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுமே ஒட்டுமொத்தமாக தோல்வியடைந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனையடுத்து பள்ளிக் கல்வித்துறை உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் பர்வாணி மாவட்டத்தில் உள்ள இரண்டு அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய 120 மாணவர்கள் ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் குறைபாடு காரணமாகவே மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்திருக்கிறது.
மாணவர்கள் தோல்வி: குறிப்பாக வணிகவியல் ஆசிரியர், மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித பாடத்தை கற்பித்ததாகவும் இடைநிலை ஆசிரியர்கள் உயர்நிலை அறிவியல் மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்த அதிர்ச்சி தகவலும் வெளியாகியிருக்கிறது. இந்த இரண்டு பள்ளிகளுமே இந்தூரில் இருந்து சுமார் 220 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது . மகாராஷ்டிரா எல்லைக்கு அருகே பர்மாணி மாவட்டத்தில் உள்ள பன்செமல் தொகுதியில் இந்த பள்ளிகள் அமைந்திருக்கின்றன.
அதிர்ச்சி சம்பவம்: மால்ஃபா அரசு பள்ளியில் கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் 85 மாணவர்கள் இந்த தேர்வுகளை எழுதினர். அதில் அனைவருமே ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்திருக்கின்றனர். பெரும் அதிர்ச்சி தந்த இந்த சம்பவத்தையடுத்து பள்ளியின் ஒட்டுமொத்த ஊழியர்களும் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல பிப்ரானி அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் 41 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
காமர்ஸ் டீச்சர்: இடைநிலை ஆசிரியர் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த பள்ளியில் அனைவருமே தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டது. அந்த பகுதி கல்வி அதிகாரியான அருண் மிஸ்ரா மால்ஃபா பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் அதிர்ச்சி தரும் இந்த தோல்விக்கு பள்ளியின் முதல்வரான அலோக் சிசோடியாவே காரணம் எனவும் அவர் மாணவர்களுக்கு தகுதியான ஆசிரியர்களை கற்பிக்க அனுமதிக்கவில்லை என்றும் பனிரெண்டாம் வகுப்பு உயிரியல் மற்றும் வேதியியல் பாடங்களை கற்பிக்க இரண்டாம் நிலை ஆசிரியரும் கணிதம் கற்பிக்க வணிகவியல் ஆசிரியரும் நியமனம் செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்ததாக கூறினார்.
வசதிகள் இல்லை: மேலும் 12 ஆம் வகுப்பு வேதியலுக்கான கெஸ்ட் ஆசிரியர் நியமிக்கப்படவில்லை எனவும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் கற்பிக்க ஒரு வணிக ஆசிரியரை எப்படி நியமனம் செய்ய முடியும் என கோபமாக கேள்வி எழுப்பினார். கடந்த ஆண்டு மாணவர்கள் தேர்ச்சி நன்றாக இருந்த நிலையில் இந்த முறை தோற்றதற்கு நான் எப்படி பொறுப்பாக என முதல்வர் தன்னிடம் கேட்டதாக மிஸ்ரா கூறியதோடு கலைப்பிரிவு மாணவர்கள் ஏன் தோல்வியடைந்தார்கள் எனக் கேட்டதற்கு மாணவர்களுக்கு சரியான வசதிகள் இல்லை அவர்களுக்கு எழுத கூட தெரியாது என்றார்.
விசாரணை அறிக்கை: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் 75 மாணவர்களில் 5 பேர் மட்டுமே பத்தாம் வகுப்பு பொதுத்தேரில் தேர்ச்சி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியரும் ஒட்டுமொத்த ஊழியர்களும் நீக்கப்பட்டுள்ள நிலையில் பர்மாணி பழங்குடியினர் நலத்துறை உதவி கமிஷனர் மற்றும் துணை கமிஷனருக்கு விசாரணை அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது எனவும் கடுமையான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் பிப்ரானி உயர்நிலைப்பள்ளி ஊழியர்கள் மீதும் இதே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்
பெற்றோர்கள் போராட்டம்: பிப்ரானி பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த 41 மாணவர்களும் தோல்வியடைந்த நிலையில் , அந்த தொகுதியில் 5 பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் வெறும் இரண்டு முதல் ஐந்து சதவீதம் வரை மட்டுமே இருக்கிறது. இதை அடுத்து கோபமடைந்த பெற்றோர்கள் மால்ஃபா பள்ளியில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய பெற்றோர்கள், பூஜ்ஜிய சதவீத முடிவு வெட்கக்கேடானது எனவும் இது மாணவர்களின் தவறல்ல ஆசிரியர்களின் தவறு என கூறினர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications