பீகார் சட்டசபை இடைத்தேர்தல்! 4 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி அபாரம்! பிரசாந்த் கிஷோர் கட்சி படுதோல்வி

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கியுள்ள நிலையில் பீகார் இடைத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டுள்ள நிலையில் அவரது கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் 4 தொகுதிகளிலும் பாஜக வென்றுள்ளது. 3 தொகுதிகளை இந்தியா கூட்டணி இழந்துள்ளது.

மற்ற கட்சிகளுக்கு வியூகம் வகுத்துக் கொடுத்து அவர்களை வெற்றி பெற செய்த பிரசாந்த் கிஷோர், தற்போது அவருடைய கட்சி போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றன.

bihar byelection 2024 prashant kishore 2024

பிரசாந்த் கிஷோர் என்பவர் ஐபேக் எனும் தேர்தல்களுக்கு வியூகம் வகுக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த ஆந்திரா சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 2021 ஆம் தமிழக சட்டசபை தேர்தல் என பிரசாந்த் கிஷஓர் வியூகம் வகுத்துக் கொடுத்து அந்த கட்சிகள் ஆட்சியை பிடித்துள்ளன.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு சட்டசபை தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார். அந்த கட்சியும் அமோக வெற்றி பெற்றது. அதன் பின்னர் இனி தேர்தல் வியூகங்களில் ஈடுபட போவதில்லை என அறிவித்த பிரசாந்த், பீகாரில் முழு நேர அரசியலில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளார்.

பீகாரில் தனது பாதயாத்திரையை கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ம் தேதி தொடங்கினார். பீகார் முழுவதும் 3 ஆயிரம் கி.மீ. தூரம் பாதயாத்திரை சென்ற பிரசாந்த் கிஷோர், அடுத்த ஆண்டு 2025 ஆம் ஆண்டு நடைபெறும் பீகார் சட்டசபை தேர்தலில் 243 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் அவர் ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். பீகாரில் உள்ள முஸ்லிம்களும், பட்டியலின மக்களும் ஜாதி, மத அடிப்படையில் வாக்களிப்பதை நிறுத்திவிட்டு, தங்களின் குழந்தைகள் எதிர்காலம் கருதி வாக்களிக்க வேண்டும் என பிரசாந்த் கிஷோர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஆகிய முக்கிய கட்சிகளுக்கு போட்டியாக பிரசாந்த் கிஷோர் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். பிரசாந்தின் கட்சி பீகாரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 4 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளது.

இந்த கட்சியின் தலைவராக பிரசாந்த் கிஷோர் இல்லாமல் முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரி மனோஜ் பாரதியை தலைவராக்கினார். ராம்கர், தராரி, பெலகஞ்ச், இமாம்கஞ்ச் ஆகிய 4 தொகுதிகளின் இடைத்தேர்தல்களிலும் பிரசாந்த் கட்சி போட்டியிட்டது.

இந்த 4 தொகுதிகளிலும் 125 முறை தேர்தல் கூட்டங்களை பிரசாந்த் கிஷோர் நடத்தியுள்ளார். அது போல் லாலு ஒரு கூட்டத்தையும் நிதிஷ் 4 கூட்டங்களையும் நடத்தியுள்ளனர். ஒவ்வொரு முறையும் தனது கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் பேசுகையில், 30 ஆண்டுகளுக்கு மேலாக பீகாரை நிதிஷும் லாலுவும் மாறி மாறி ஆட்சி செய்தனர். அவர்களது நேரம் முடிந்துவிட்டது. நிதிஷுக்கும் லாலுவுக்கும் வாக்களித்து சோர்ந்து போன வாக்காளர்களுக்கு நன்மை செய்யவே ஜன் சுராஜ் என்ற கட்சி தொடங்கப்பட்டது என பேசியிருந்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம் பீகார் சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பிரசாந்த் கிஷோரின் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில் 4 தொகுதிகளின் வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில் 4 லும் பாஜக கூட்டணியே வென்றுள்ளது. இதன் மூலம் ஏற்கெனவே தன்னிடம் இருந்த 3 தொகுதிகளை காங்கிரஸ் கூட்டணி இழந்துவிட்டது. முதல் முறையாக ஆழம் பார்த்த பிரசாந்த் கிஷோர் கட்சிக்கு பெரும் தோல்வி அடைந்துள்ளார்.

ராம்கார் தொகுதியில் பாஜக சார்பல் போட்டியிட்ட அசோக் குமார் சிங் 62257 வாக்குகள் பெற்று வென்றுள்ளார். ஜன் சுராஜ் கட்சியை சேர்ந்த சுஷில் குமார் சிங் 6513 வாக்குகளை பெற்று படுதோல்வி அடைந்தார். அதாவது டெபாசிட்டை இழந்தது கிஷோர் கட்சி.

தாராரி தொகுதியில் பாஜக வேட்பாளர் விஷால் பிரசாந்த் 78755 வாக்குகளை பெற்று வென்றார். ஜன் சுராஜ் கட்சியின் வேட்பாளர் கிரண் சிங் 5622 வாக்குகளை பெற்று டெபாசிட் இழந்துள்ளார்.

இமான்கஞ்ச் தொகுதியில் பாஜக கூட்டணி கட்சியான இந்துஸ்தானி ஆவாம் மோர்சா(HAM) கட்சியின் தீபா குமாரி 53435 வாக்குகளை பெற்று வென்றுள்ளார். ஜன் சுராஜ் கட்சியின் ஜிதேந்திர பஸ்வான் 37103 வாக்குகளை தோல்வியடைந்துள்ளார்.

பெலகஞ்ச் தொகுதியில் ஐக்கிய ஜனதா தளத்தின் மனோரமா தேவி 73334 வாக்குகளை பெற்று வென்றுள்ளார். அது போல் ஜன சுராஜ் கட்சியின் முகமது அமாஜத் 17285 வாக்களுடன் தோல்வி அடைந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+