நல்லா தள்ளு, அமுக்கி தள்ளு: ம.பி. முதல்வரின் விமானத்தை தள்ளிய போலீசார்
போபால்: மத்திய பிரதேசத்தில் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிஹ் சவ்ஹானின் விமானத்தை போலீசார் சேர்ந்து தள்ளிய சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவ்ஹான் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள திங்கட்கிழமை தனி விமானம் மூலம் சிந்த்வாரா சென்றார். நண்பகல் 12 மணிக்கு அவரது விமானம் தரையிறங்கியது. அவரின் விமானம் தரையிறங்கிய சில நிமிடங்களில் சிந்த்வாரா தொகுதியில் 9 முறை வெற்றி பெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் கமல் நாத்தின் விமானம் தரையிறங்க வந்தது.

ஆனால் சிந்த்வாரா விமான நிலையத்தில் ஒரு நேரத்தில் ஒரு விமானம் தான் தரையிறங்க முடியும் என்பதால் கமல் நாத்தின் விமானம் வானில் 20 நிமிடங்கள் வட்டமிட்டது. இதற்கிடையே ஓடுதளத்தில் நின்ற சவ்ஹானின் விமானத்தை பல போலீசார் சேர்ந்து 15 முதல் 20 அடி தூரம் தள்ளி சென்று நிறுத்தினர். அதன் பிறகே கமல் நாத்தின் விமானம் தரையிறங்கியது.
கமல் நாத்தின் விமானம் சவ்ஹானுக்கு முன்பு அங்கு தரையிறங்க வேண்டியது. ஆனால் தாமதமாக வந்தது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,
விமான நிலையத்தில் டோ வாகனம் இல்லை. அதனால் போலீசாரை விமானத்தை தள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. எரிபொருளை மிச்சப்படுத்தவே விமானி விமானத்தை தள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இது வழக்கமான ஒன்று தான் என்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications