லக்னோ: எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து; பயணிகள் காயம்
Subscribe to Oneindia Tamil
அலகாபாத்: லக்னோ அருகே ஹரித்துவார் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் பயணிகள் காயமடைந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் இருந்து நேற்று மாலை அலகாபாத்துக்கு ‘ஹரித்வார் எக்ஸ்பிரஸ்' புறப்பட்டு சென்றது. இந்த ரெயில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவின் புறநகர்ப் பகுதியான நிகோகா அருகில் தடம் புரண்டது.
ரெயின் கடைசி 3 பெட்டிகள் தடம் புரண்டு ஒன்றுடன் ஒன்று மோதியதால், அந்த பெட்டிகளில் இருந்த சில பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே போலீஸ் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் தடம்புரண்ட பெட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டு, விரைவில் போக்குவரத்து சரி செய்யப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications