அம்பேத்கர் பற்றி அவதூறு பேச்சு.. கன்னட நடிகர் மீது தலித் அமைப்பினர் கருப்பு மை வீச்சு
பெங்களூர்: அம்பேத்கர் பற்றி அவமரியாதையாக பேசிய கன்னட நடிகர் முகத்தில் தலித் சங்கர்ஷ சமித்தி அமைப்பினர் கருப்பு மை பூசிய சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலர்-கன்னடா என்ற தனியார் தொலைக்காட்சி சேனல், பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவை நடத்தி வருகிறது. இதில் கன்னட நடிகர் 'ஹுச்சா' வெங்கட் என்பவரும் பங்கேற்றிருந்தார். ஆனால் ஷோவுக்கு நடுவே, சக போட்டியாளரோடு கைகலப்பில் ஈடுபட்டதாக கூறி, வெளியேற்றப்பட்டார்.
நிகழ்ச்சியில் நடந்தவை குறித்து, பல்வேறு கன்னட செய்தி தொலைக்காட்சி அரங்கங்களுக்கும் சென்று, பேட்டியளித்து வந்தார் வெங்கட். இதேபோல, இரு நாட்கள் முன்பு, ஒரு செய்தி சேனலில் பேட்டியளித்தபோது, சட்ட மேதை அம்பேத்கர் பற்றி அவமரியாதையாக பேசியுள்ளார்.
இந்நிலையில், மற்றொரு டிவி சேனலுக்கு நேற்றிரவு தனது காரில் சென்றுகொண்டிருந்தார் வெங்கடேஷ். அப்போது வழி மறித்த தலித் சங்கர்ஷ சமித்தி என்ற தலித் அமைப்பை சேர்ந்தவர்கள், வெங்கட் முகத்தில் கருப்பு மையை ஊற்றினர்.
காருக்குள் இருந்த வெங்கட்டை கீழே இறங்குமாறி, கூறி, அடித்தனர். இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்திற்கு பிறகு, அம்பேத்கர் பற்றிய கருத்துக்காக, வெங்கட்டை போலீசார் கைது செய்தனர். மை ஊற்றிய நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications