இந்தியா-பாகிஸ்தான் மேட்சில் புது சர்ச்சை.. அமெரிக்க யூடியூபரிடம் “கணபதி பாபா” என முழங்க சொன்ன ரசிகர்
அகமதாபாத்: இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பார்க்க வந்த அமெரிக்க யூடியூபர் ஸ்பீடிடம் அங்கிருந்த குஜராத் ரசிகர்கள் கணபதி பாபா என முழக்கமிட சொல்லி அதற்கு அவர் மறுப்பு தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

2023 ஆம் ஆண்டு ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிய உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்திய அணி இந்த தொடரில் மீண்டும் வெற்றிபெற்று தாய் மண்ணில் கோப்பையை ஏந்துமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் வலுவான ஆஸ்திரேலிய அணியை எளிதாக வீழ்த்தி வெற்றிகரமான உலகக்கோப்பை பயணத்தை இந்திய அணி தொடங்கியது. அடுத்து டெல்லியில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து பலரால் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியை எந்த நிகழ்ச்சிகளும் இன்றி பிசிசிஐ மிகச் சாதாரணமான முறையில் நடத்தியது விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டியை முதல் போட்டி அல்லது இறுதிப் போட்டி அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து கலை நிகழ்ச்சிகளை நடத்தியது பிசிசிஐ. இதுவும் சர்ச்சைக்கு உள்ளானது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்ய பாகிஸ்தான் பேட்டிங்கில் களமிறங்கியது.
ஆனால், தொடக்கத்தில் நிதானமாக ஆடிய பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களுக்கே ஆல் அவுட் ஆகினர். அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித் ஷர்மாவின் அபாரமான ஆட்டத்தால் எளிதில் இலக்கை கடந்து வெற்றிபெற்றது. இந்த போட்டியை காண உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவரது மகனும் பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா, சச்சின் டெண்டுல்கர், ஏராளமான திரை பிரபலங்கள் என பலர் வந்திருந்தனர்.

இந்த போட்டியில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் முஹம்மது ரிஜ்வான் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்து சென்றபோது குஜராத் ரசிகர்கள் ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட்டது, மைதான டிஜே ஜெய்ஸ்ரீராம் என பாடலை போட்டது அனைத்தும் விவாதப் பொருளானது. பாகிஸ்தான் பயிற்சியாளரே இதனை கண்டித்து இருந்தார். இந்திய ரசிகர்களும் இதனை கண்டித்து #SorryPakistan என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகிறார்கள். தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இதனை கண்டித்து இருந்தார்.
இந்த நிலையில் மற்றொரு சர்ச்சையும் கிளம்பி உள்ளது. இந்த போட்டியை காண வந்திருந்த இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகரும், அமெரிக்காவை சேர்ந்த பிரபல யூடியூபருமான ஸ்பீடிடம் அங்கிருந்த ரசிகர்கள், கணபதி பாபா என கூற சொன்னது சர்ச்சையாகி உள்ளது. இதனை கேட்டவுடன் யூடியூபர் ஸ்பீட் நோ என்று சொல்லி மறுத்து உள்ளார். உடனே அந்த ரசிகர்கள், கடவுளின் பெயரை சொல்வதில் தவறில்லை என்கிறார். அதற்கு ஸ்பீட் விளக்கம் கேட்க நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம் என அந்த ரசிகர் சொல்கிறார். இந்த காட்சி வெளியாகி விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
-
சமாதானமாகும் அண்ணாமலை?.. பேட்மிண்டன் மைதானத்துக்கே தேடிப்போன மத்திய அமைச்சர்! பின்னணி -
தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? 26 தொகுதிகளுக்கு வெளியான உத்தேச பட்டியல்! குஷ்பு, அண்ணாமலை மிஸ்ஸிங்! -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
அண்ணாமலைக்குப் போகிறதா கோவை வடக்கு.. சட்டென வானதி சீனிவாசன் கொடுத்த ரியாக்ஷன் -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை!











Click it and Unblock the Notifications