‛‛என்னோட அப்பாவ காணல’’.. கைக்கூப்பி போலீசிடம் கதறிஅழுத சிறுவன்.. சபரிமலை கூட்ட நெரிசலில் உருக்கம்
சபரிமலை: ஐயப்பன் கோவிலுக்கு தற்போது அதிகளவு பக்தர்கள் செல்வதால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் கூட்ட நெரிசலில் காணாமல் போன அப்பாவை கண்டுபிடித்து தரும்படி சிறுவன் ஒருவன் போலீஸ்காரரிடம் கைக்கூப்பி கண்ணீர் விட்டு கதறிய சம்பவம் அனைவரையும் உருக்கி உள்ளது.
கார்த்திகை மாதம் தொடங்கியுடன் சபரிமலை பக்தர்கள் மாலை அணிந்து ஐயப்பனுக்கு விரதம் தொடங்கி உள்ளனர். தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டு மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. அதன்பிறகு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும். பொன்னம்பலமேட்டில் மகரஜோதியை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அதன்பிறகு ஜனவரி 20ம் தேதியுடன் இந்த ஆண்டுக்காக மண்டல பூஜை, மகர ஜோதி பூஜை முடிவடைய உள்ளது.
இந்நிலையில் தான் கார்த்திகை மாதம் துவக்கத்தை விட தற்போது ஐயப்பன் கோவில் வரும் பக்தர்களின் எண்ணிக்கை என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வருவதாக கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில் தான் தற்போது பக்தர்களின் எண்ணிக்கையை கட்டுக்கடங்காத வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையை திருவிதாங்கூர் தேவசம் போர்டும், போலீசாரும் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.
இதனால் கடந்த 5 நாட்களாக சபரிமலையில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் பல பக்தர்கள் கூட்டத்தை பார்த்து மிரண்டு போய் தரிசனம் செய்யாமல் பந்தளத்தில் வீடு திரும்பி வருகின்றனர். இதற்கிடையே தான் தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி வருகிறது. இந்த வீடியோ என்பது நீலக்கல் பகுதியில் எடுக்ககப்பட்டுள்ளது.
அதாவது சபரிமலை பக்தர்கள் தரிசனத்துக்காக சென்றுள்ளனர். அப்போது அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பக்தர்கள் வாகனம் ஒன்றில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அப்போது வாகனத்தில் இருந்த சிறுவனின் தந்தை காணாமல் போயுள்ளார். தனது தந்தை மாயமானதை அறிந்த அந்த சிறுவன் வாகனத்தின் ஜன்னல் வழியே பார்த்தபடி கதறி அழுதார். அப்போது அருகே போலீஸ்காரர் ஒருவர் வர தனது தந்தையை கண்டுபிடித்து தரும்படி அந்த சிறுவன் கைகளை கூப்பியபடி கெஞ்சி கோரிக்கை வைத்தார்.
இதற்கிடையே சிறுவனின் தந்தையும் அங்கு வந்தார். இதையடுத்து சிறுவன் தனது அழுகையை நிறுத்தினான். இதற்கிடையே தான் அந்த சிறுவன் தனது தந்தையை காணவில்லை எனக்கூறி கைகளை கூப்பி கதறி அழுத வீடியோ இணையதளங்களில் வெளியாகி பார்க்கும் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications