For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈவிஎம்-னா என்ன அர்த்தம் தெரியுமா - உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அடேங்கப்பா விளக்கம்!

ஈவிஎம் எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் புது விளக்கத்தை அளித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

கோரக்பூர் : மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் ஈவிஎம்-மிற்கு புது விளக்கம் தந்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் கட்சி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் ஈவிஎம் எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் நடைபெற்ற கோளாறு காரணமாகவே பாஜக வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதை நினைவுகூர்ந்தார்.

Amidst complaints against EVM by opposition parties, UP CM Yogi Adityanath delivers a new meaning for EVM

டெல்லியில் 3 மாநகராட்சிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றியடைந்திருப்பதன் மூலம் EVM என்றால் 'எவரி வோட் மோடி' என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக யோகி பெருமையோடு கூறியுள்ளார்.

டெல்லி உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி தோற்றதை மட்டும் வைத்து யோகி இந்த கருத்தை தெரிவிக்கவில்லை.ஏனெனில் உத்தரபிரதேச மாநிலத்தில் மாபெரும் வெற்றி பெற்று பாஜக ஆட்சியமைத்த போது எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டின.

பாஜகவின் செயல் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாலேயே பாஜக சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அனைத்திலும் மாபெரும் வெற்றியை பெற்றுவருவதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலிலும் இதே வெற்றி பிரதிபலிக்கும் என்றும் முதல்வர் யோகி கூறினார்.

English summary
UP cm yogi adityanath delivers a new meaning to EVM as 'EVERY VOTE MODI'
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X