லடாக்கில் பாலம் கட்டுகிறதா சீனா? எல்லைப்பகுதியில் நீடிக்கும் போர் பதற்றம்
டெல்லி: இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் எல்லையோர பகுதியான லடாக்கில், மனிதர்கள் இல்லாத பகுதியில் சீனா பாலம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இது தொடர்பாக இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறுகையில், " டோக்லாம் எல்லை பிரச்சினை இன்னமும் தீரவில்லை. அதைத் தீர்க்க இந்தியா மற்றும் சீனா ராணுவ தரப்புகள் எடுத்த எல்லா ராஜதந்திர முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன.

இதனால் டோக்லாம் பகுதியில் நிலவும் போர்ப் பதற்றம் குறையவில்லை. இந்த நிலையில் லடாக் பகுதியில் மனிதர்கள் இல்லாத நிலப்பகுதியில் சீனா பாலம் அமைக்க, நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளி வந்துள்ளன.
ஆனால் அது உண்மையில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இருந்த போதிலும் டோக்லாம், லடாக், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட எல்லா எல்லையோர பகுதிகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்திய ராணுவம் எப்போதும் விழிப்போடு இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏன் எனில் சீனாவுக்கு லடாக் மட்டும் நோக்கமில்லை. சிக்கிம் எல்லைப் பகுதியும் சீனாவின் இலக்குதான். எனவே உச்சபட்ச எச்சரிக்கை நமது ராணுவ வீரர்களுக்கு, உளவுத்துறை கொடுத்த தகவல்களின் அடிப்படையில் விடுக்கப்பட்டுள்ளது." என்று தெரிவித்தன.
இந்த நிலையில், நேற்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "டோக்லாம் எல்லையில் ஓர் அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம். சீன எல்லைக்குள் இந்திய வீரர்கள் ஊடுருவியுள்ளனர். அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும். இந்தியாவின் வாதம், கோரிக்கை ஏற்கக்கூடியது அல்ல" என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவும் சீனாவும் ஒரே நேரத்தில் எல்லைப்பிரச்சனையை தீர்க்க முடிவெடுக்க வேண்டும், இரு நாடும் யார் முதலில் படைகளை வாபஸ் பெறுவது என்று போட்டிபோட்டால் போர்ப் பதற்றம் நீடிக்கத்தான் செய்யும் என்கின்றன சர்வதேச ஊடகங்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications