ராம்தேவ் தாளத்துக்கு ஆட்டம் போடும் அமித் ஷா.. கலகல யோகா டே!
சர்வ தேச யோகா தினத்தையொட்டி குஜராத்தில் நடைபெற்ற யோகா பயிற்சியின் போது பாபா ராம்தேவ் போட்ட தாளத்திற்கு ஆட்டம் போட்டு அமித் ஷா யோகா செய்து கலகலப்பை ஏற்படுத்தினார்.
அகமதாபாத்; 2015ம் ஆண்டு முதல் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மூன்றாவது ஆண்டாக இன்று குஜராத்தில் பாபா ராம்தேவ் யோகா தினத்தைக் கொண்டாடினார்.
பாபா ராம்தேவ் நடத்திய யோகா கொண்டாட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் ஏராளமான பொதுமக்களும் பங்கேற்று கலகல யோகா பயிற்சி எடுத்தனர்.

பிரமாண்ட மேடை
இந்த நிகழ்ச்சியில் அமித் ஷா, பாபா ராம்தேவ் ஆகியோர் நின்று யோகா செய்வதற்காக பெரிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. இந்த மேடையில் அவர்கள் நின்று கொண்டிருந்த போது, ஒலிப் பெருக்கியில் பாட்டு பாடப்பட்டது.

பாட்டுக்கு டான்ஸ்
அந்த பாட்டுக்கு ஏற்ப குதித்து குதித்து ராம்தேவ் யோகா செய்தார். அவர் குதிப்பதைப் பார்த்து அமித் ஷாவும் குதித்து குதித்து யோகா செய்தார். பின்னர், ராம்தேவ் கையை உயர்த்தியவாறு குதித்து டான்ஸ் ஆடத் தொடங்கிவிட்டார். அமித் ஷாவும் அவர் ஆடிய மாதிரியே நடனமாட முயற்சி செய்தார்.

கலகல யோகா
இவர்களை பின்பற்றி யோகா செய்ய வந்த பொதுமக்களும், பாட்டுக்கேற்றபடி அமித் ஷாவும், பாபா ராம்தேவ்வும் டான்ஸ் ஆடியதால் அதே போன்று ஆடிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அமைதியாய் நடக்க வேண்டிய யோகா, கலகலவென ஆட்டம் பாட்டமாய் முடிந்தது.
|
வைரல் வீடியோ
இந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து பல்வேறு விமர்சனங்களையும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications